பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.., சீமான் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் சீமான் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரியில் பேட்டியளிக்கும் போது, தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
சர்ச்சை பேச்சு தொடர்பாக சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் சீமான் மீது பொலிஸார் இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, பெரியார் பற்றி சீமான் கூறும் கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில் உள்ளது. அதனால் சீமான் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 20ஆம் திகதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அண்ணா நகர் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |