உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது! பாய்ந்து வரும் காளைகளை அடக்கும் வீரர்கள்... நேரலை வீடியோ
உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
பொங்கல் திருநாளையொட்டி, மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், மாட்டுப் பொங்கல் தினமான இன்று மதுரை அருகே உள்ள பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சற்றுமுன்னர் தொடங்கின. இந்த போட்டியிலும், ஒவ்வொரு சுற்றிலும் மாடுபிடி வீரர்கள் வெவ்வேறு கலர் யூனிபார்ம் அணிந்து வந்து விளையாடுவார்கள்..
மதுரை, திருச்சி, கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த காளைகள் இன்றைய ஜல்லிக்கட்டில் கலந்து கொள்கின்றன..
இந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகளும், 300 காளையர்களும் கலந்து கொள்கின்றன. பாய்ந்து வரும் காளைகளை அடக்கி பரிசுகளை அள்ளி செல்லும் உற்சாகத்துடன் வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
நேரலை வீடியோ கீழே,