நாவூறும் சுவையில் மதுரை மட்டன் குழம்பு: எப்படி செய்வது?
மதுரையில் கறி சோறு இல்லாமல் ஊர் திருவிழாக்களை பார்ப்பது மிகவும் அரிது.
மதுரை என்றாலே மட்டன் குழம்பு, மட்டம் பிரியாணி, மட்டன் கறி தோசை போன்ற மட்டன் உணவுகள் தான் பிரபலமான ஒன்று.
அந்தவகையில், வீட்டிலேயே சுவையான மதுரை மட்டன் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- மட்டன் கறி- ½ kg
- தக்காளி- 2
- சின்ன வெங்காயம் -1 கப்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- கசகசா- 2 ஸ்பூன்
- சீரகம்- 2 ஸ்பூன்
- குழம்பு மசாலா பொடி- 2 ஸ்பூன்
- கருவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி- சிறிது
- தேங்காய்- ½ மூடி
- நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் கசகசா, சீரகம் இரண்டையும் அம்மி அல்லது மிக்ஸியில் நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அம்மியில் ஒரு 5 சின்ன வெங்காயத்தை தட்டி எடுக்கவும்.
அடுத்து மட்டனை நன்றாகக் கழுவி அரைத்த மசாலா, தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், குழம்பு மசாலாப்பொடி உப்பு போட்டு குக்கரில் 5 விசில் விட்டு வேக விடவும்.

பின்னர் ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சோம்பு , கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளிக்க வேண்டும்.
அடுத்து மட்டன் சேர்த்து கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து தேங்காய்ப்பால் ஊற்ற வேண்டும்.
மிதமான தீயில் எண்ணெய் தெளிந்து மேலே மிதந்தது வந்ததும் கொத்தமல்லி தலையை தூவி இறக்கினால் சுவையான மட்டன் குழம்பு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |