தள்ளுவண்டியில் உணவு விற்று கோடீஸ்வரரான மதுரை தமிழர்! Unreserved ரயிலில் சென்றவருக்கு அவ்வளவு சொத்துக்கள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், ராஜஸ்தான் மாநிலத்தில் தள்ளுவண்டி கடையை நடத்தி தற்போது பெரிய உணவகத்தை கட்டி கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
யார் அவர்?
தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்பு என்பவர், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் தள்ளுவண்டி கடை நடத்தி வந்தவர். தற்போது மிகப்பெரிய உணவகம் வைத்து கோடீஸ்வரராக மாறியுள்ளார். இவர், பெரிய பணக்காரராக இருந்தாலும் தான் வைத்திருந்த தள்ளுவண்டியை மூடவில்லை.
இவர், ஜெய்ப்பூரில் வைத்திருக்கும் 5 தள்ளுவண்டி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இவருக்கு மதுரைக்கு அருகே உள்ள உசிலம்பட்டி தான் பூர்வீகம். இவருடைய அனைத்து தொழில்களும் தரைமட்டமாகப் படுத்துவிட்டன.
அதனால், ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று, கடந்த 2000 -ம் ஆண்டு ராஜஸ்தானுக்குப் பிழைப்புத் தேடி சென்றார். அதாவது ரூ.400 கொடுத்து ரயிலில் பொது பெட்டியில் பயணம் செய்து ராஜஸ்தான் சென்றுள்ளார். தனது குடும்பம் முழுவதும் ஹொட்டல் தொழில் நடத்தி வருவதால் அந்த நம்பிக்கையில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இவருக்கு அங்கு இந்தியும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது. இருந்தாலும் ஒற்றை ஆளாய் தனது உழைப்பால் இன்றைக்கு கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
சொந்தமாக 5 மாடி கட்டடம்
இன்றைக்கு அன்புக்கு, ஜெய்ப்பூரில் 5 மாடி கட்டடம் உள்ளது. ஒரு மாடியில் 200 பேர் கலந்து கொள்ளும் அளவுக்கு Party Hall உள்ளது.
இவருடைய மனைவி வீட்டில் ஹவுஸ் வைஃபாக உள்ளார். முதல் மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இரண்டாவது மகள் தமிழ்நாட்டில் Physiotherapy படித்து வருகிறார். மூன்றாவது மகன் MBBS டாக்டர் படிக்கிறார்.
இவர், ராஜஸ்தான் சென்ற காலத்தில் தோசை ஒன்றை ரூ.10க்கு விற்றுள்ளார். ஆனால், அதே தோசையை இன்று ரூ.90 க்கு விற்பனை செய்கிறார். இந்த தகவலை அவர் Archives of Hindustan என்ற Youtube தளத்திற்கு பேசியுள்ளார்.
இவர் கடையில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். மேலும், சேமித்த பணத்தில் எல்லாம் சொத்துக்களை தமிழ்நாட்டில் வாங்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |