ஆசியக் கோப்பையில் அறிமுகமான இரண்டு இலங்கை வீரர்கள்!
இரண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள மதீஷா பதிரனா, தனது முதல் சர்வதேச போட்டியில் இன்று களமிறங்கினார்
21 வயது தில்ஷன் மதுஷன்காவுக்கு இதுதான் முதல் சர்வதேச போட்டி ஆகும்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில், இலங்கையின் இரண்டு இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கான இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாக இரண்டு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 19 வயதான மதீஷா பதிரனா என்ற வலக்கை வேகப்பந்து வீச்சாளரும், 21 வயதான தில்ஷன் மதுஷன்கா என்ற இடக்கை வேகப்பந்து வீச்சாளரும் இன்றைய போட்டியில் அறிமுகமாகியுள்ளனர்.
Congratulations to Dilshan Madushanka and Matheesha Pathirana, Sri Lanka’s 95th and 96th Men’s T20I players respectively! ??#RoaringForGlory pic.twitter.com/L5BqMYwCDx
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) August 27, 2022
இலங்கை அணிக்காக டி20 கிரிக்கெட்டில் களமிறங்கும் 95 மற்றும் 96வது வீரர்கள் மதுஷன்கா, பதிரனா ஆவர்.