கனடாவில் மகள்களுடன் மாயமான தந்தை... மூவரையும் உயிருடன் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கான காரணங்கள்
கனடாவின் கியூபெக் மாகாணத்தில், தங்கள் தந்தையுடன் சிறுமிகள் இருவர் காணாமல் போன நிலையில், பின்னர் மூவரும் சடலங்களாகவே கண்டெடுக்கப்பட்டார்கள். ஆனால், தற்போது விசாரணை அதிகாரி ஒருவர் மேற்கொண்டுள்ள விசாரணையில், அவர்களை உயிருடன் மீட்டிருக்க வாய்ப்பிருந்தது என்றும், பொலிசார் முதல் பல தரப்பில் நிகழ்ந்த பல தவறுகள் காரணமாகவே அவர்களை உயிருடன் மீட்க இயலவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
கியூபெக்கைச் சேர்ந்த மார்ட்டின் கார்பென்டியர் (44), தனது மகள்கள் நோரா (11) மற்றும் ரோமி (6) ஆகியோருடன் மர்மமான முறையில் மாயமானார்.
அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர்கள் சென்ற கார் பயங்கர விபத்துக்குள்ளானதாக தகவலறிந்து பொலிசார் அங்கு சென்றபோது, அந்த காரில் யாரும் இல்லை.
தந்தையையும் மகளையும் பொலிசார் வலைவீசித் தேடிய நிலையில், மூன்று நாட்களுக்குப்பின் சிறுமிகள் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்கள்.
சுமார் இரண்டு வார தேடுதல் வேட்டைக்குப்பிறகுதான் மார்ட்டினும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
மார்ட்டினை கொடூரமான நபராகவும், அவர் இறந்ததால் நிம்மதி என்பது போலவும் அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.
ஆனால், விசாரணை அதிகாரி ஒருவர் மேற்கொண்ட விசாரணை ஒன்று முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணத்தை வெளிப்படுத்தியுள்ளது.
2015ஆம் ஆண்டு, மார்ட்டின் தன் மனைவியான அமெலியை பிரிந்திருக்கிறார். ஆனாலும், விவாகரத்து செய்தால் தன் மகள்களைப் பிரிய நேருமே என அஞ்சி விவாகரத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்திருக்கிறார்.
தம்பதியரின் பிள்ளைகளில், ரோமி மார்ட்டினுக்குப் பிறந்தவள். ஆனால், நோரா அமெலியின் முதல் கணவருக்கு பிறந்தவள். அவள் பிறந்ததும், அவளை தத்தெடுத்துக்கொண்ட மார்ட்டின் இரண்டு பிள்ளைகளையும் மிகவும் நேசித்துள்ளார்.
இதற்கிடையில் மார்ட்டின் தன் மனைவி அமெலியாவைப் பிரிந்ததும், அமெலியா மீண்டும் தன் முதல் கணவருடனான தொடர்பைப் புதுப்பித்துக்கொண்டிருக்கிறார். அவர்கள் மீண்டும் இணையும் பட்சத்தில், தன் பிள்ளைகளை, குறிப்பாக, அமெலியாவின் முதல் கணவருக்குப் பிறந்த நோராவை அவர்கள் தன்னிடமிருந்து பிரித்துவிடுவார்கள் என அஞ்சியிருக்கிறார் மார்ட்டின்.
இந்த விடயங்கள் எதுவுமே முதலில் பொலிசாருக்கு சொல்லப்படாமல் விடப்படவே, அவர்கள் காணாமல் போனதாக கருதி மெதுவாகத்தான் ஆம்பர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள் பொலிசார். முதலிலேயே ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் அவர்களைப் பார்த்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்திருக்க வாய்ப்புள்ளது.
அத்துடன், மார்ட்டின் கடும் மன அழுத்தத்தில் இருந்த நிலையில், அவரால் பிள்ளைகளுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் உறவினர்கள் கூறியிருக்கிறார்கள்.
மார்ட்டினும் பிள்ளைகளும் சென்ற கார் விபத்துக்குள்ளானதும், விபத்து என்ற கோணத்தில் மட்டுமே பொலிசார் அவர்களைத் தேடியிருக்கிறார்கள். ஆனால், அந்த விபத்தே தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள மார்ட்டின் வேண்டுமென்றே செய்ததுதான் என்கிறார் விசாரணை அதிகாரி.
இதுபோக, கார் விபத்தில் காயமடைந்த மூவரும் மருத்துவமனைக்குச் சென்றிருந்த நிலையில், பொலிசார் மருத்துவமனையில் சென்று விசாரித்தபோது, இது இரகசிய தகவல் உங்களுக்கு கொடுக்க இயலாது என மருத்துவமனை தெரிவித்திருக்கிறது. ஆக, மார்ட்டின் மற்றும் பிள்ளைகளைக் கண்டுபிடிக்கும் மற்றொரு வாய்ப்பும் தவறிவிட்டிருக்கிறது.
ஆக, இப்படி வழக்கில் தொடர்புடைய பலரும் பல விடயங்களை கோட்டை விட்டிருக்காவிட்டால் மார்ட்டினையும் பிள்ளைகளையும் விரைவாக, அத்துடன், உயிருடன் கண்டுபிடித்திருக்கலாம் என்று கூறியுள்ள விசாரணை அதிகாரி, வழக்குகளில் இதுபோன்ற தடைகளை நீக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.