சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்து மாயமாகும் அகதிகள்... அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கை
2021ஆம் ஆண்டின் பாதிக்குப் பிறகு, சுமார் 5,000க்கும் மேற்பட்ட அகதிகள் சட்ட விரோதமாக சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்துள்ளார்கள். அவர்கள் ஆஸ்திரியா நாட்டிலிருந்து ரயில் வழியாக சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்தவர்கள்.
அத்துடன், அவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரியாவில் புகலிடம் கோரியவர்கள் ஆவர். ஆகவே, சுவிட்சர்லாந்து அவர்களை மீண்டும் ஆஸ்திரியாவுக்கே திருப்பி அனுப்ப முடியும்.
ஆனால், வழக்கமாக அப்படி நடப்பதில்லை. அதற்கு காரணம், அதற்கான நடைமுறை மிகவும் நீண்டது, சுவிட்சர்லாந்தில் அப்படி சட்ட விரோதமாக நுழையும் அகதிகளை காவலில் அடைப்பதற்கான வசதியும் சுவிட்சர்லாந்தில் இல்லை.
ஆகவே, அவர்களில் பெரும்பாலானோர் மாயமாகிவிடுகிறார்கள். பிரான்சை இலக்காக வைத்து புறப்படும் இந்த அகதிகளில் பெரும்பாலானோர் ஆப்கன் நாட்டவர்கள் ஆவர்.
இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக சுவிஸ் நீதித்துறை அமைச்சரான Karin Keller-Sutterம், ஆஸ்திரிய தரப்பில் Gerhard Karnerம் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள்.
சுவிட்சர்லாந்தில் நோக்கம், இந்த அகதிகளை ஆஸ்திரியாவுக்கு திருப்பி அனுப்புவது, அதற்கான நடைமுறைகளை வேகப்படுத்துவதும் ஆகும் என்றார் Keller-Sutter.