மகா கும்பமேளா மரண விழாவாக மாறியது.., மம்தா பானர்ஜி பேச்சு
மகா கும்பமேளா மரண விழாவாக மாறிவிட்டது என்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார்.
மம்தா பானர்ஜி ஆவேசம்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் திகதி மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தருகின்றனர்.
இதில் மவுனி அமாவாசையொட்டி மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்கு பக்தர்கள் திரண்டு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மேற்குவங்க மாநிலத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "மகா கும்பமேளா மரண விழாவாக மாறிவிட்டது.
அங்கு சரியான திட்டமிடல் இல்லை. நான் மகா கும்பமேளாவை மதிக்கிறேன். இங்கு ஏழைகளுக்கு என்று தகுந்த ஏற்பாடுகள் உள்ளை. ஆனால், பணக்காரர்கள் மற்றும் வி.ஐ.பி. கூடாரங்கள் ரூ.1 லட்சம் வரை பெற அமைப்புகள் உள்ளன.
மகா கும்பமேளாவில் கூட்டம் ஏற்படுவது பொதுவான ஒன்று தான். ஆனால் அங்கு திட்டமிடல் சரியாக இல்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |