300 ஆண்டுகளுக்கு பின் சிவராத்திரியில் உருவாகும் சிறப்பு யோகம் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பஞ்சாங்கத்தின்படி இவ்வருடம் வரவிருக்கும் சிவராத்திரியில் 300 ஆண்டுகளுக்கு பின் மங்கள யோகம் உருவாக இருக்கிறது.
சிவபெருமானை அறிந்து, புரிந்து, மகிழ்வித்து, ஆசைகளை நிறைவேற்றும் வரம் பெற ஏற்ற காலமாக எப்போதும் இருப்பது மகாசிவராத்திரி.
மாசி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் சதுர்த்தசியின் சிவராத்திரி சிறப்பு மிக்கது. இதை மஹா சிவாராத்திரி என அழைப்பதும் உண்டு.
2024 ஆம் ஆண்டுக்கான சிவராத்திரி மார்ச் 8 ஆம் திகதி வருகிறது.
இந்த தினத்தில் பக்தர்கள் சிவன் கோயிலுக்கு சென்று வழிப்பாட்டில் ஈடுபடுவது வழக்கம். இத்தினத்தில் இரவு நேர பூஜைக்கு தான் சக்தி அதிகம். எனவே பூஜையின் மங்களகரமான நேரம் சதுர்த்தசி திகதியில் இருக்க வேண்டும்.
இரவின் எட்டாவது கணம் நிஷித காலம் என்று அழைக்கப்படுகிறது.
நிஷித காலம்
நிஷித காலம் என்பதை நடுநிசி நேரம் என அழைப்பர். இந்நேரமானது இருள் சூழ்ந்த நாளாக இருக்கும்.
பிரபஞ்ச ரகசியங்கள் வெளிப்படும் நேரம் என்று சொல்லுவார்கள். இந்த நாளில் நிஷித காலம் இரவு 9.58 மணி முதல் 12.31 மணி வரை இருக்கும். இந்த நேரத்தில் சிவபெருமானையும் பார்வதி அன்னையும் வழிப்படலாம்.
300 ஆண்டுகளுக்கு பின் நிகழும் யோகம்
இந்த வருடம் மகாசிவராத்திரியுடன் சுக்ர பிரதோஷ விரதமும் வருகிது. இந்நாளில் சிவ யோகமும் சர்வார்த்த சித்தி யோகமும் சேர்ந்துள்ளது.
இந்த யோகத்தில் செய்யப்படும் வழிபாடு மற்றும் சுப காரியங்கள் அனைத்தும் பல மடங்கில் பலனை அள்ளி தரும்.
கிரக சேர்க்கை
சிவராத்திரி அன்று சனி பகவான் தனது அசல் முக்கோண ராசியான கும்பத்தில் இருக்கிறார். மேலும், சூரிய பகவான் சந்திரனுடன் கும்ப ராசியில் அமர்ந்திருப்பார்.
கிரகங்களின் இந்த நிலை பலனைத் தரும் திரிகிரஹி யோகத்தை உருவாக்குகிறது.
மஹாசிவராத்திரியின் நல்ல நேரம் 2024
முதல் பிரகாரம் - மார்ச் 8 மாலை 06:25 முதல் இரவு 9:28 வரை
இரண்டாவது பிரஹார் - இரவு 9.28 முதல் 12.31 வரை
மூன்றாவது பிரஹார் 12:31 AM முதல் 3:34 AM வரை நீடிக்கும்
இறுதி பிரஹார் 3:34 AM முதல் 6:37 AM வரை நீடிக்கும்
இந்நாளில் என்ன செய்ய வேண்டும்?
சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து சுத்தமாக வேண்டும்.
பின் சங்கரர் பஞ்சாமிர்தத்துடன் நீராடி, மா கௌரி, விநாயகர், கார்த்திகேயர் மற்றும் நந்தி ஆகியோரையும் வணங்க வேண்டும்.
அடுத்து சங்கரருக்கு குங்குமம் கலந்த நீரை சமர்ப்பித்து, சந்தனத் திலகம் பூச வேண்டும்.
மூன்று வில்வ இலைகள், வெள்ளை ஊமத்தம் பூ, கமால் கட்டே, பழங்கள், இனிப்புகள், இனிப்பு பான், வாசனை திரவியம் மற்றும் தக்ஷிணா ஆகியவற்றை கோயிலுக்கு வழங்க வேண்டும்.
இறுதியாக ருத்ராட்ச ஜெபமாலையுடன் ஓம் நமோ பகவதே ருத்ரே, ஓம் நம சிவாய ருத்ரே சாம்பவே பவானிபதயே நமோ நம என்ற மந்திரத்தை உச்சரிக்கவும்.
விரும்பினால் சிவ சஹஸ்ரநாமம், சிவன் சாலிசா அல்லது சிவபுராணம் பாராயணம் செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |