என் மீது தவறில்லை! தைரியம் இருந்தா கேஸ் கொடுங்க.. நடிகர் விஜய் சேதுபதிக்கு நேரடியாக சவால் விட்ட மகாகாந்தி
உண்மையாகவே என் மீது தவறு இருந்தால் என் மீது நடிகர் விஜய் சேதுபதி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என்று மகாகாந்தி கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சேதுபதி பெங்களூர் சென்று இருந்தார்.
அப்போது விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் எட்டி உதைத்த சம்பவம் சோசியல் மீடியா முழுவதும் தீயாய் பரவியது.
இதையடுத்து பொலிசார் அந்த மர்ம நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் பெயர் மகா காந்தி என்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விஜய் சேதுபதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மகாகாந்தியின் விளக்கம் வேறு மாதிரியாக இருக்கிறது.
விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக அவருக்கு வாழ்த்து சொன்ன பிறகு குரு பூஜையில் கலந்து கொண்டீர்களா என்று கேட்டுள்ளார்.
அதற்கு விஜய் சேதுபதி யார் குரு என்று கேட்டிருக்கிறார். அந்த சமயத்தில் வாக்குவாதம் முற்றியதால் விஜய் சேதுபதியுடன் இருந்தவர்கள் தன்னை தாக்கியதாகவும் தான் திருப்பி தாக்கியதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து விமானத்தில் நடந்த சம்பவம் குறித்த வீடியோவை கேட்டு அனுமதிக் கடிதம் கொடுத்துள்ளேன். என் மீது தவறு இருந்தால் அந்த வீடியோவை கேட்டு கடிதம் கொடுத்திருப்பேனா? உண்மையில் என் மீது தவறு இருந்தால் விஜய்சேதுபதி சட்டப்படி என் மீது வழக்குத் தொடரட்டும்.
அதற்கு அவருக்கு தைரியம் இருக்கிறதா? ஆனால் நான் அந்த வீடியோ கிடைத்த உடன் தைரியமாக வெளியிடுவேன் என உறுதியாக கூறுகிறார்.