மாஸ் காட்டிய கேப்டன் மஹாராஜ்! 537 ரன் இலக்கு..சூடுபிடிக்கும் டெஸ்ட்
ஜிம்பாப்பே அணிக்கு எதிரான டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி 537 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.
வியான் முல்டர் 147 ஓட்டங்கள்
புலவாயோ டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணியின் வியான் முல்டர் (Wiaan Mulder) மிரட்டல் சதம் விளாசினார்.
அவர் 2 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 147 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வெர்ரெய்ன்னே 36 (56) ஓட்டங்களில் அவுட் ஆனார். பின்னர் கைகோர்த்த கார்பின் போஷ் (Corbin Bosch), கேஷவ் மஹாராஜ் (Keshav Maharaj) அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
போஷ் 36 (41) ஓட்டங்களில் வெளியேற, கேப்டன் மஹாராஜ் 6வது அரைசதத்தை பதிவு செய்தார்.
இமாலய இலக்கு
அவர் 70 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆக, தென் ஆப்பிரிக்கா 369 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
மஸகட்ஸா 4 விக்கெட்டுகளும், சிவாங்கா மற்றும் வின்சென்ட் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன்மூலம் ஜிம்பாப்பே அணிக்கு 537 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஆடிய ஜிம்பாப்பே அணி மூன்றாவது நாள் முடிவில் 1 விக்கெட்டுக்கு 32 ஓட்டங்கள் எடுத்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |