மூன்று முறை கனவில் வந்த மகாராணியார்: லண்டனுக்கு ஓடோடி வந்த பிரித்தானியர்...
ஸ்டீபன் என்பவர் மகாராணியாரின் உடலைக் காண்பதற்கக நேற்றே லண்டனுக்கு வந்துவிட்டார்.
தன் கனவில் ஒரே நாளில் மூன்று முறை மகாராணியார் வந்ததாகக் கூறுகிறார் அவர்.
தன் கனவில் ஒரே நாளில் மூன்று முறை மகாராணியார் வந்ததாகக் கூறும் பிரித்தானியர் ஒருவர், அவரது உடலைக் காண்பதற்காக முதல் ஆளாக வந்தவர்களில் ஒருவராகியுள்ளார்.
ஸ்டீபன் என்னும் அந்த பிரித்தானியர், மகாராணியாரின் உடலைக் காண்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படுவதற்கு முன்பே, நேற்றே (செப்டம்பர் 13) மத்திய லண்டனுக்கு வந்துவிட்டார்.
மகாராணியாரின் உடலைக்காண வந்த முதல் ஒன்பது பேரில் ஸ்டீபனும் ஒருவர்.
உண்மையில், மகாராணியாரின் உடலைக் காண்பதற்காக முதன்முதலில் வந்தவர் இலங்கைத் தமிழ்ப்பெண்ணான Vanessa Nathakumaran (56) என்பவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
image: PA