திருமணத்தின்போது மேகன் கேட்ட கிரீடத்தைக் கொடுக்க மறுத்த மகாராணியார்: பின்னணியில் ரஷ்ய இளவரசியின் மரணம்
பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமணத்தின்போது, மேகன் ஒரு குறிப்பிட்ட கிரீடத்தை அணிய விரும்பியுள்ளார்.
அதன் பின்னணியில் ஒரு சர்ச்சை இருப்பது அவருக்குத் தெரியாது.
பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமணத்தின்போது, மணப்பெண்ணான மேகன் ஒரு குறிப்பிட்ட கிரீடத்தை அணிய விரும்பியுள்ளார்.
ஆனால், அதன் பின்னணியில் ஒரு பெரிய சர்ச்சை உள்ளது.
வேடிக்கை என்னவென்றால், ராஜகுடும்ப வரலாறு தெரிந்த ஹரிக்கே அந்த சர்ச்சை குறித்து சரியாகத் தெரியாததால், மகாராணியார் அந்த கிரீடத்தை மேகனுக்கு கொடுக்க மறுத்ததற்காக அவர் கடும் ஆத்திரம் அடைந்தாராம்.
image - wikipedia
ஆம், அந்த கிரீடத்தை மகாராணியார் மேகனுக்குக் கொடுக்காததற்குக் காரணம், அது ஒரு குடும்பத்தையே பலிவாங்கிய ஒரு கொடூர சம்பவத்துடன் தொடர்புடைய கிரீடமாம்.
ரஷ்யப் புரட்சி காலத்திலிருந்தே அந்தக் கிரீடம் பிரித்தானிய ராஜகுடும்பத்தின் வசம் உள்ளதாம். 1918ஆம் ஆண்டு, ரஷ்ய ஜார் மன்னரான இரண்டாம் Nicholas உட்பட, மொத்த ரஷ்ய ராஜ குடும்பமும் Bolshevik புரட்சியாளர்களால் கொல்லப்பட்டனராம். அப்போது அந்தக் குடும்ப நகைகள் சில பிரித்தானியாவை வந்தடைந்தனவாம்.
மேகன் கேட்ட அந்த கிரீடத்தை அணிந்திருந்த ஜார் இளவரசியும் கொல்லப்பட்டாராம்.
image - wikipedia
ஆகவேதான் அந்த கிரீடத்தை மேகன் கேட்டபோது, அதை அணிவது நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தாது என கருதித்தான் மகாராணியார் அதை மேகனுக்குக் கொடுக்க மறுத்தார் என்கிறார் ராஜகுடும்ப எழுத்தாளரான Robert Lacey என்பவர்.
இது தெரியாத ஹரி, தன் மனைவி கேட்ட கிரீடம் கிடைக்காததால் ஆத்திரப்பட்டாராம். இன்னும் என்னென்ன உண்மைகள் ஹரிக்குத் தெரியாதோ, தெரியவில்லை!