வாழ்வின் கடைசி நாட்களை வெளியே சொல்ல முடியாத கவலையுடன் செலவிட்ட மகாராணியார்...
பிரித்தானிய மகாராணியாரின் இறுதி நாட்கள் அவருக்கு மனவேதனையை ஏற்படுத்தக்கூடியவையாக இருந்தன.
மகாராணியாரின் பேரனான ஹரியும் அவரது மனைவி மேகனும் அவருக்கு அளவுக்கதிகமாகவே வேதனையை ஏற்படுத்திவிட்டார்கள்.
பிரித்தானிய மகாராணியாரின் இறுதி நாட்கள் அவருக்கு மனவேதனையை ஏற்படுத்தக்கூடியவையாக இருந்தன.
குறிப்பாக, அவரது செல்லப்பேரனான ஹரியும் அவரது மனைவி மேகனும் ராஜகுடும்பத்துக்கு கொண்டு வந்த அவப்பெயர் மகாராணியாரை மிகவும் நோகடித்துவிட்டது.
மகாராணியாரின் பெரியப்பாவான மன்னர் எட்வர்ட், விவாகரத்தான அமெரிக்கப் பெண்ணான வாலிஸ் சிம்சன் என்பவரைத் திருமணம் செய்ய முடிவு செய்தார். ஆனால், அவர் விவாகரத்தான ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால் மன்னராக இருக்கமுடியாது என இங்கிலாந்து திருச்சபையும், ஒரு அமெரிக்கப் பெண்ணை ராணியாக ஏற்றுக்கொள்ள முடியாது என பிரித்தானிய மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க, பதவியேற்று வெறும் 326 நாட்களிலேயே தனது மன்னர் பதவியைத் துறந்தார் எட்வர்ட். அவரது இடத்தில் மகாராணியாரின் தந்தையான ஐந்தாம் ஜார்ஜ் மன்னரானார்.
அப்படி ஒரு அதிர்ச்சியளிக்கும் விடயம் குறித்து அறிந்திருந்தும், தனது செல்லப்பேரனான ஹரி விவாகரத்தான ஒரு அமெரிக்கப் பெண்ணை மனைவியாக தேர்வு செய்தபோது, மேகனை மனதார ஏற்றுக்கொண்டார் மகாராணியார்.
ஆனால், மேகன் அரண்மனையில் காலடி எடுத்துவைத்ததுமே அவர் செய்த அலப்பறைகளை உலகமே அறியும்.
கடைசியில் ஒருநாள் தாங்கள் பொறுப்புகளிலிருந்து விலகுவதாகவும் அமெரிக்காவில் சென்று வாழ இருப்பதாகவும் ஹரியும் மேகனும் இன்ஸ்டாகிராமில் அறிவிக்க, சட்டப்படி அவர்கள் இனி ராஜகுடும்பத்தினராக எந்த சலுகைகளையும் பெற முடியாது என அறிவித்தாலும், அப்போதும் அவர்கள் குடும்பத்தின் அங்கம்தான், அவர்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழட்டும் என வாழ்த்தி அனுப்பினார் மகாராணியார்.
ஆனால், வெளியே போனதும் மீண்டும் வேலையைக் காட்ட ஆரம்பித்தார் மேகன். தொலைக்காட்சி ஒன்றில் அவரும் ஹரியும் அளித்த பெட்டியில் ராஜகுடும்பத்தை அவமதிக்கும் விதத்தில் பல விடயங்களை அவர் வெளியிட, மகாராணியாருக்கு தர்மசங்கடமாகிப்போனது.
ஏற்கனவே கணவர் இளவரசர் பிலிப்புக்கு உடல் நலமில்லாததால் கவலையில் ஆழ்ந்திருந்த மகாராணியாரை மேகன், ஹரியின் ஒவ்வொரு அசைவும் சங்கடப்படுத்தின.
Credit: Michal Wachucik/Abermedia
என்றாலும், ஹரியையும் மேகனையும் குறித்து தவறாக எதுவுமே சொல்லவில்லை மகாராணியார். கடைசிவரை, என் அன்பிற்குரிய குடும்ப உறுப்பினர்கள் என்றே அவர்களைக் கூறிவந்தார் அவர்.
அத்துடன், ஹரியும் மேகனும் கொடுத்த வேதனைகளை அவர் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் தன் மனதுக்குள்ளேயே மறைத்துவைத்துக்கொண்டார் அவர்.
கடைசியில், ஹரி, தன்னை மிகவும் நேசித்த, தனது அன்பிற்குரிய பாட்டியை சந்திக்கும் முன்பே, அவர் இந்த உலக வாழ்விலிருந்து விடைபெற்றுவிட்டார்.