யாத்திரை முடித்து திரும்பிய பக்தர்கள்..சினிமாவைப்போல் நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்..6 பேர் பலி
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் ஆம்னி பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 6 பேர் பலியாகினர்.
பயங்கர விபத்து
மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் ஆம்னி பேருந்தில் பயணித்தனர். அவர்கள் அனைவரும் அமர்நாத் யாத்திரைக்கு சென்றுவிட்டு ஹிங்கோலிக்கு திரும்பியுள்ளனர்.
அப்போது நாசிக் நோக்கி நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு ஆம்னி பேருந்து ஒன்று, முன்னால் சென்ற லொறியை முந்த முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் எதிர்பாராத விதமாக இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
20க்கும் மேற்பட்டோர் காயம்
அவர்களில் மூன்று பேர் பெண்கள். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியானவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பலாம் எனவும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் எஸ்பி கடஸ்னே தெரிவித்தார்.
PTI Photo
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |