திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் கல்லாக மாறிய நிகழ்வு: மர்ம கிராமத்தின் கதை
சத்தீஷ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தில் இருக்கும் சிறிய கிராமத்தின் பெயர் பாரதிய பந்தா.
பாரதிய என்பது திருமணத்தையும், பந்தா என்பது கிராமத்தையும் குறிக்கிறது.
இந்த கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருமண ஊர்வலத்திற்கு சென்ற அனைத்து விருந்தினர்களும் கல்லாக மாறியதாக ஒரு கதை உள்ளது.
மர்ம கிராமத்தின் கதை
ஒருமுறை அரசனின் திருமண ஊர்வலம் இந்த கிராமத்தின் வழியாக சென்றதாக, அந்த கிராமத்தில் இருக்கும் பெரியவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாலை நேரமாகிவிட்டதால், ஊர்வலம் ஓரிடத்தில் நின்று, அங்கே திருமணக் குழு ஓய்வெடுத்துள்ளது.
மறுநாள் எழுந்து குளித்து திருமண விருந்தினர்கள், தங்களது குலதெய்வத்தை வணங்கி, அங்கு ஒரு ஆடு ஒன்றை பலியிட்டனர்.
ஆடு பலியிடப்பட்ட அந்த இடத்திற்கு அருகில் ஒழுக்கமான நெறிமுறைகளுடன் வாழ்ந்து வந்த துறவி ஒருவரின் குடிசை இருந்தது.
திருமண விருந்தினர்கள் வெட்டிய ஆட்டின் ரத்தக்கறை குடிசையின் அருகே படிந்தது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த துறவி, திருமண ஊர்வலம் முழுவதையும் கல்லாக மாறும்படி சபித்தார்.
இதனால், அவர்கள் அனைவரும் கல்லாக மாறியதோடு, அவர்கள் கொண்டு வந்த விலங்குகள், மேளதாளங்கள் மற்றும் ஈட்டிகள் உள்ளிட்ட அனைத்தும் கல்லாக மாறியது.
அந்த கிராமத்திற்கு பாரதிய பந்தா என்று பெயர் வந்ததாகவும் அந்த கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் தொல்பொருள் ஆராய்ச்சிகளின் முடிவில் இந்த கற்கள் அனைத்தும் 2-3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், இந்த பழங்குடியினரின் கல்லறையாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |