அறிமுகப் போட்டியில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்.. தென் ஆப்பிரிக்காவை திணறவிட்ட தடம் பதித்த இலங்கை வீரர்! குவியும் பாராட்டு
தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய இலங்கை அறிமுக வீரர் மகீஷ் தீக்ஷனா வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து மிரள வைத்தார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தெ்ன ஆப்பரிக்க அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடி வருகிறது.
ஒரு நாள் தொடர் 1-1 என சமனில் இருந்த நிலையில், நேற்று கொழும்பு மைதானத்தில் நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-1 என இலங்கை தொடரை கைப்பற்றி அசத்தியது.
இலங்கை அறிமுக வீரர் மகீஷ் தீக்ஷனா வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தது மட்டுமின்றி, மளமளவென 4 விக்கெட்டுகளை கைப்பற்றி தென் ஆப்பரிக்கா அணியை திணறடித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் பந்தில் விக்கெட் எடுத்த 21 ஆம் நூற்றாண்டில் பிறந்த இலங்கையின் முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற புகழுக்கு சொந்தக்காரரானார் மகீஷ் தீக்ஷனா.
Maheesh Theekshana's 4-wicket haul ?| The first Sri Lanka spinner to take a four-wicket haul on men's ODI debut.?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) September 8, 2021
Full Highlights➡️ https://t.co/M4UM3FGSBA #SLvSA pic.twitter.com/M0plTr9Pxm
அதுமட்டுமின்றி, ஒரு நாள் அறிமுகப் போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையும் மகீஷ் தீக்ஷனா படைத்துள்ளார்.
முதல் போட்டியிலே தனது சுழல் திறனால் மிரட்டிய மகீஷ் தீக்ஷனாவை மேத்தியூஸ் உட்பட பலர் பாராட்டு வருகின்றனர்.