இந்திய அணியை துவம்சம் செய்து உலக டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து! வாழ்த்திய இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தனே
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாதனை படைத்த நியூசிலாந்து அணிக்கு இலங்கை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெற்றது.
மழை காரணமாக 6 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் நியூசிலாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனேவும் வாழ்த்தியுள்ளார்.
அவரின் டுவிட்டர் பதிவில், நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். முற்றிலும் அற்புதமான முயற்சி. தகுதியான டெஸ்ட் சாம்பியன்கள் என பதிவிட்டுள்ளார்.
Congratulations @BLACKCAPS .. absolutely brilliant effort on the day. Deserved test champions #WTCFinal
— Mahela Jayawardena (@MahelaJay) June 23, 2021