அந்த பெண்ணை இப்படி தான் பொலிஸ் முன்னாடியே அடிக்குறாங்க! அதிர்ச்சி வீடியோவை மேற்கோள் காட்டிய மஹேலா ஜெயவர்தனே
இலங்கையில் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலின் போது பெண்ணொருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வீடியோவை மேற்கோள் காட்டி மஹேலா ஜெயவர்தனே கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறித்த வீடியோவில் பெண்ணொருவரை சுற்றியிருக்கும் நபர்கள் சரமாரியாக தாக்குகின்றனர். இந்த வீடியோ பதிவை மேற்கோள் காட்டி இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே டுவிட்டரில் பதிவு ஒன்றை காட்டமாக பதிவிட்டுள்ளார்.
அதில், இப்படித்தான் அவர்கள் ஒரு பெண் போராட்டக்காரரை பொலிஸ் அதிகாரிகளுக்கு முன்பாகத் தாக்கினார்கள்... இலங்கை பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை அரசாங்கம் வன்முறையை கட்டவிழுத்துவிட்டது அவமானமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
This is how they attacked a female protester in front of police officers … shame on you @PodujanaParty and government of SL for using violence. https://t.co/hA26f5q5eX
— Mahela Jayawardena (@MahelaJay) May 9, 2022