ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்கிய சென்னை! வாழ்த்திய இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தனே.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க
ஐபிஎல் தொடரை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மஹேலா ஜெயவர்தனே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தாவை சென்னை அணி துவம்சம் செய்து சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
நேற்றைய வெற்றி மூலம் 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று காட்டி உள்ளது. சிஎஸ்கே அணியின் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள டோனி ரசிகர்கள், சென்னை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவானும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளருமான மஹேலா ஜெயவர்தனே சென்னை அணியை பாராட்டியுள்ளார்.
அவரின் டுவிட்டர் பதிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள். வெல் டன் ஸ்டீபன் ப்ளெமிங்! (சென்னை அணி பயிற்சியாளர்) அருமையான ஐபில்2021 சீசன் என பதிவிட்டுள்ளார்.
Congratulations @ChennaiIPL !!! Well done @SPFleming7 ? fantastic season #IPL2021
— Mahela Jayawardena (@MahelaJay) October 15, 2021