வன்முறை ஒருபோது தீர்வாகாது, இந்த செயலை கண்டிக்கிறோம்! மஹேல ஜெயவர்த்தனே
இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வன்முறையை கண்டிப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தை ஆர்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
ஆங்காங்கே வன்முறை வெடித்ததால் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தனே வன்முறை போராட்டம் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இது சரியான வழிமுறை அல்ல... அமைதியான முறையில் தான் போராட வேண்டும். வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. இந்த செயலை முழு மனதுடன் கண்டிக்கிறோம்...' என கூறியுள்ளார்.
This is not what this movement is about… peaceful protest. Violence is never the solution. Condemn this act wholeheartedly… https://t.co/gKan3ANVcb
— Mahela Jayawardena (@MahelaJay) July 9, 2022
PC: AP Photo