உங்கள் பங்களிப்பு விலைமதிப்பற்றது! ஓய்வு பெற்ற வீரரை பாராட்டிய மஹேல ஜெயவர்த்தனே
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பொல்லார்டை பாராட்டி மஹேல ஜெயவர்த்தனே பதிவிட்டுள்ளார்.
பொல்லார்டின் ஓய்வு
ஐபிஎல் ஏலம் தொடங்க உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் சில வீரர்களை விடுவித்து வருகின்றன. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி கீரென் பொல்லார்டை விடுவிப்பதாக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, மும்பையை தவிர வேறு எந்த அணியிலும் விளையாட தனக்கு மனமில்லை எனக்கூறி, ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்ட் அறிவித்தார்.
பிரியாவிடை கொடுத்த ஜெயவர்த்தனே
இந்த நிலையில் ஓய்வு பெற்ற பொல்லார்டுக்கு, இலங்கையின் ஜாம்பவான் வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசனை பயிற்சியாளராகவும் உள்ள மஹேல ஜெயவர்த்தனே பிரியாவிடை அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'நம்ப முடியாத 13 ஆண்டு பயணத்திற்கு வாழ்த்துக்கள் பாலி. மும்பை இந்தியன்ஸில் நீங்கள் அற்புதமாக விளையாடியுள்ளீர்கள். நீங்கள் ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் நீலம் மற்றும் தங்க நிற சீருடையை அணிந்திருந்தீர்கள். பல ஆண்டுகளாக அணியும், உரிமையும் கட்டமைக்கப்பட்ட பாரம்பரியத்தை உருவாக்க நீங்கள் உதவியுள்ளீர்கள், உங்கள் பங்களிப்பு விலைமதிப்பற்றது' என தெரிவித்துள்ளார்.
Congrats Polly on an incredible 13-year journey. You have been amazing with Mumbai Indians. You wore blue and gold with passion and commitment. You’ve helped create a legacy which the team and franchise was built around for many years and your contribution was priceless ? pic.twitter.com/F3m2k42WBc
— Mahela Jayawardena (@MahelaJay) November 16, 2022