பதவி விலகிய மஹேல ஜெயவர்த்தனே! அணி நிர்வாகம் அறிவிப்பு
மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் விலகிய ஜெயவர்த்தனேவுக்கு புதிய பொறுப்பு
மூன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஜெயவர்த்தனே Global Head of Performance பொறுப்பு வகிப்பார் என அறிவிப்பு
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து மஹேல ஜெயவர்த்தனே விலகியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்த்தனே, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று அணிகளாக செயல்பட உள்ளது.
MI
ஒரு அணி சர்வதேச டி20 தொடரிலும், ஒரு அணி தென் ஆப்பிரிக்க டி20 தொடரிலும், ஒரு அணி ஐபிஎல் தொடரிலும் விளையாடும். இந்த மூன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்குமான Global Head of Performance பொறுப்பை ஜெயவர்த்தனே ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கிரிக்கெட் நடவடிக்கைகளின் இயக்குனராக இருந்த ஜாகீர் கான், மூன்று கிரிக்கெட் மேம்பாட்டுக்கான உலகளாவிய தலைவராக செயல்படுவார் எனவும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
BCCI