அதிவேக 10 ஆயிரம் ஓட்டங்கள்! இந்த தலைமுறையின் சிறந்தவர்களில் ஒருவர்: புகழ்ந்து தள்ளிய ஜெயவர்த்தனே
இளம் வயதில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை இலங்கை ஜாம்பவான் மஹேல ஜெயவர்த்தனே பாராட்டியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார். டெஸ்ட் போட்டி விளையாட ஆரம்பித்து 9 ஆண்டுகளிலேயே இந்த மைல்கல்லை எட்டி அபார சாதனை படைத்தார் ரூட்.
அதேபோல் 31 வயதில் 10 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்து அலஸ்டையர் குக்கின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார். இந்த நிலையில், ஜோ ரூட்டின் சாதனையை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் மஹேல ஜெயவர்த்தனே பாராட்டியுள்ளார்.
Photo Credit: BCCI/IPL
அவர் தனது டிவீட்டில், '10 ஆயிரம் ஓட்டங்கள் கிளப்பில் இணைந்ததற்கு வாழ்த்துக்கள் ரூட். நேற்று உங்களுடையது அற்புதமான ஆட்டம். இந்த தலைமுறையில் உண்மையிலேயே சிறந்தவர்களில் ஒருவர் நீங்கள். மிக வேகமாக வேலை செய்கிறீர்கள் என தெரிகிறது, சிறப்பாக முடித்தீர்கள் நண்பரே' என தெரிவித்துள்ளார்.
Congratulations @root66 joining the 10k club and what an amazing knock yesterday. Truly one of the best in this generation. Well done mate and looks like the b’fast is working ???
— Mahela Jayawardena (@MahelaJay) June 6, 2022
Photo Credit: Twitter(@englandcricket)