சிறப்பாக முடித்தீர்கள் வீரர்களே! உலகத் தரமான ஆட்டம்..இலங்கை அணியை பாராட்டிய மஹேல ஜெயவர்த்தனே
இலங்கை அணி உலகத் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக பாராட்டிய மஹேல ஜெயவர்த்தனே
சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்ற இலங்கை அணிக்கு மஹேல ஜெயவர்த்தனேவின் வாழ்த்து
ஆசியக் கோப்பையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இலங்கை அணிக்கு முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்த்தனே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடியில் மிரட்டிய குசால் மெண்டீஸ் 37 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் விளாசினார்.
PC: IANS
இதன்மூலம் இலங்கை அணி சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றது. வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்த்தனே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
PC: Twitter
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'சிறப்பாக முடித்தீர்கள் வீரர்களே!!! அழுத்தமான சூழலில் அற்புதமாக சண்டையிட்டு வெற்றி பெற்றுள்ளீர்கள்.. உலகத் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை கூறுவதே பாதுகாப்பாக சொல்வதாக இருக்கும்' என தெரிவித்துள்ளார்.
Well done guys!!! Fantastic fight back to win this game under pressure.. safe to say it was a world class performance ??? @OfficialSLC #AsiaCup2022
— Mahela Jayawardena (@MahelaJay) September 1, 2022