85 வயதில் கண்ணாடி அணியாமல் படிக்க போகிறார்! இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் குறித்து மஹேல ஜெயவர்த்தனே பதிவிட்ட ட்வீட்
இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள அப்துல் ஹமீத் முகமது பௌஸி குறித்து ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தனே ட்வீட் பதிவிட்டுள்ளார்.
A.H.M பௌஸி
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து முஜிபுர் ரகுமான் பதவி விலகினார்.
அதனைத் தொடர்ந்து A.H.M பௌஸி பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 85 வயதான அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
NewsWire
ஜெயவர்த்தனே ட்வீட்
இந்த நிலையில் A.H.M பௌஸி குறித்து ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தனே ட்வீட் செய்துள்ளார். அவரது பதவியில், '85 வயதில் கண்ணாடி அணியாமல் அவரால் படிக்க முடியும் என்று நான் நம்பிக்கை வைத்துள்ளேன்' என தெரிவித்துள்ளார்.
I have hope ?? will be able to read with out glasses ? at 85 https://t.co/oXS8R0h6Sg
— Mahela Jayawardena (@MahelaJay) February 9, 2023
@AFP