கொரோனா பாதிப்பிலும் சாதித்துக்காட்டிய இலங்கைக்கு வாழ்த்துக்கள்: மஹேல ஜெயவர்த்தன
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு, முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்த்தன வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காலேவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என இலங்கை சமன் செய்தது. இந்த நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேல ஜெயவர்த்தன, வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இலங்கை அணி சிறப்பாக விளையாடியது. கேப்டன் திமுத் கருணரத்னேவுக்கும், அணி மற்றும் உதவிபுரிந்த பணியாளர்களுக்கும் மாபெரும் வாழ்த்துக்கள்.
Well played @OfficialSLC.. massive congratulations to @IamDimuth the team and support staff. Also to the selectors who had to make some tough decisions with Covid cases in the squad ???
— Mahela Jayawardena (@MahelaJay) July 11, 2022
அதேபோல் அணியில் கொரோனாவால் வீரர்கள் பாதிக்கப்பட்டபோது, கடுமையான சூழலில் சரியான முடிவுகளை எடுத்த தேர்வர்களுக்கும் வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார்.
12 wickets for Prabath Jayasuriya as ?? won by an innings and 39 runs in the final Test in Galle ? #SLvAUS Test series finishes 1-1 ? pic.twitter.com/55P9S96WqZ
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 11, 2022