வெல்டன் பாய்ஸ்! தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்பிய இலங்கை அணியை பாராட்டிய ஜெயவர்தனே
வெஸ்ட் இண்டீஸ் அணியை 2வது டி20 போட்டியில் வீழ்த்திய இலங்கை அணிக்கு ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே பாராட்டு தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸில் இலங்கை அணி சுற்றுபயணம் மேற்கொண்டு தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் பொல்லார்ட் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசி வியக்க வைத்தார்.
இதையடுத்து இலங்கை அணி செயல்பாடு மீது விமர்னம் எழுந்தது. இந்த நிலையில் நேற்று புதிய உத்வேகத்தோடு 2வது போட்டியில் களமிறங்கிய இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.
இதையடுத்து இலங்கை வீரர்களுக்கு ஜாம்பவான் ஜெயவர்தனே பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில், அருமையாக மீண்டு வந்தீர்கள், வெல்டன் பாய்ஸ் என பதிவிட்டுள்ளார்.
Fantastic come back @OfficialSLC well done boys ? https://t.co/iraYgv44ah
— Mahela Jayawardena (@MahelaJay) March 6, 2021