இலங்கையில் மருந்தில்லாமல் மரணிக்கும் குழந்தைகள்... கோட்டாபயவை ராஜினாமா செய்யக்கோரி ஜெயவர்தனே கொந்தளிப்பு
இலங்கையில் எரிபொருள் மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக குழந்தைகள் சரியான நேரத்தில் சிகிச்சை பெற முயடிாமல் பலியான சம்பவங்கள் அறிந்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மகிலா ஜெயவர்தனே வேதனை வெளிப்படுத்தியுள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு, இந்தியா உட்பட பல நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் Yasuni Manikkage, நாட்டில் நிகழும் தவிர்க்கக்கூடிய மரணங்கள் குறித்து படித்து மனதளவில் நான் துவண்டு விட்டேன் என வேதனை வெளிப்படுத்தியுள்ளார்.
மருத்துவர்கள் சாட் குழுவிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். தவிர்க்கக்கூடிய மரணங்கள் குறித்து படித்து மனதளவில் நான் துவண்டு விட்டேன்.
பெட்ரோல் இல்லாத காரணத்தினால் தந்தையால் நேரத்திற்கு குந்தையை மருத்துவனைக்கு கொண்டுவர முடியாததால் குழந்தை மரணம்.
மருந்து தட்டுப்பாடு காரணமாக உயிர் காக்கும் மருந்து வாங்க தந்தை பல மருந்தகங்களுக்கு சென்று சுற்றி திரிந்து தாமதமாக மருந்து வாங்கி வந்ததால், 12 வயது குழந்தை மரணமடைந்த சம்பவங்களை Yasuni Manikkage ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வாழ்க திராவிட மாடல்! சீமான் பரிகாசம்
Yasuni Manikkage ட்விட்டை குறிப்பிட்டு பதிலளித்த இலங்கை முன்னாள் விரிக்கெட் வீரர் மகிலா ஜெயவர்தனே, ஒரு தந்தையாக, அவர்கள் எத்தகைய துயரத்தில இருப்பார்கள் என்பதை என்னால் சிந்தித்து பார்க்க முடிகிறது.
ஒருவேளை கோட்டாபய இதை படித்து குற்ற உணர்வு ஏற்பட்டால், அவரும், அவரது நிர்வாகத்தில் இருக்கும் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும், ஏனெனில் நாட்டின் இந்நிலைக்கு அவர்தான் காரணம் என ஜெயவர்தனே கொந்தளித்துள்ளார்.