பாட்டியின் பிரிவால் கதறி அழுத மகள்! ஆறுதல் கூற முடியாமல் உடைந்துபோன மகேஷ் பாபு.. சோகத்தில் ஆழ்த்திய வீடியோ
கதறி அழும் மகளை அமைதிப்படுத்த முடியாமல் மனமுடைந்து போன மகேஷ் பாபு
பாட்டியின் உடலை அருகில் பார்த்ததும் வீறிட்டு அழுத மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா
பாட்டியின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் நடிகர் மகேஷ் பாபுவின் மகள் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது.
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி இன்று காலமானார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது 70வது வயதில் மரணமடைந்தார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா பாட்டியின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் தேம்பி தேம்பி அழுதது அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது.
அவரது தாய் அம்ரிதா ஆறுதல்படுத்த முயன்றார். எனினும் சித்தாரா கதறி அழுதார். உடனே அங்கு வந்த மகேஷ் பாபு மகளை அமைதிப்படுத்த முயற்சித்தார். பின்னர் தந்தையின் மடியில் அமர்ந்துகொண்ட சித்தாரா அழுகையை நிறுத்தவே இல்லை.
மகளுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் மகேஷ் பாபு உடைந்து போயிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் மகேஷ் பாபுவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.