மகளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் பிரபல இயக்குனர்! சர்ச்சை பேச்சு
பூஜா பட் மட்டும் எனக்கு மகளாக பிறக்காவிட்டால், நான் பூஜா பட்டை திருமணம் செய்திருப்பேன் என்று பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மகேஷ் பட் கூறியுள்ள தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் மகேஷ் பட்
பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் மகேஷ் பட். இவர் இயக்குநர் மட்டுமல்ல தயாரிப்பாளரும் கூட.
மர்டர், ஜிஸ்ம், ஜுர்ம் உட்பட பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரமாண்ட இயக்குநராக மாறினார். இப்படிப்பட்ட பிரமாண்ட இயக்குநர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
மகேஷ் பட்டின் முதல் மனைவி கிரண் பட். இவருக்கு பிறந்தவர்தான் பூஜா பட். ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் அட்டை படத்திற்காக தன் மகள் பூஜா பட்டை மடியில் வைத்துக் கொண்டு லிப் டூ லிப் கிஸ் கொடுத்தார். இந்த அட்டைப் படம் வெளியாகி பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
மகேஷ் பட்டின் இந்தச் செயலை பலர் சமூகவலைத்தளங்களில் கண்டித்து விமர்சனம் செய்திருந்தனர்.
மகேஷ் பட் சர்ச்சை பேச்சு
இதனையடுத்து, பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மகேஷ் பட், இந்த முத்த சர்ச்சை குறித்து பேசுகையில், பூஜா பட் மட்டும் என் மகளாக பிறக்கா விட்டால் நான் அவரை திருமணம் செய்திருப்பேன் என்ற ஒரே போடா போட்டார். இவர் பேசியது கூட்டத்திற்கு வந்திருந்த பத்திரிகையாளர்களை முகம் சுழிக்க வைத்தது.
தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இவரெல்லாம் ஒரு அப்பாவா என்று கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |