7.5 சதவீதம் வட்டி! பெண்களுக்கான சேமிப்பு திட்டம் - முழு தகவல் உள்ளே
பெண்கள் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் வகையில் 'மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்' திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார்.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (Mahila Samman Saving Certificate)
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) என்பது கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட முக்கியமான முதலீட்டுத் திட்டமாகும். இந்த மகளிர் மட்டும் திட்டத்தின் காலம் 2 ஆண்டுகள்.
இத்திட்டம் ஏப்ரல் 1-ஆம் திகதி அதாவது புதிய நிதியாண்டில் தொடங்கும் என்றும், நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மூலமாகவும் இந்தத் திட்டத்தில் பெண்கள் சேர முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த திட்டம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இனிமேல், பெண்கள் வங்கிகள் மூலமாகவும் இந்தத் திட்டத்தில் சேர முடியும்.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சமீபத்திய சிறுசேமிப்பு திட்டமான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் கணக்குகளை இப்போது 12 பொதுத்துறை வங்கிகள் மற்றும் 4 தனியார் துறை வங்கிகளில் திறக்கலாம். முன்னதாக இந்த திட்டத்தை தபால் நிலையங்கள் மூலம் மட்டுமே தொடங்க முடியும். இத்திட்டம் இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
மத்திய நிதி அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி லிமிடெட் மற்றும் ஐடிபிஐ வங்கி போன்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்-2023 க்கு விண்ணப்பிக்கலாம்.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்றால் என்ன?
அதிக பெண்களை முதலீடு செய்ய ஊக்குவிக்கும் வகையில், 2023 பட்ஜெட்டில், மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழை, பெண்களுக்கான ஒரு முறை சேமிப்புத் திட்டமாக, மத்திய அரசு அறிவித்தது. பெண்களுக்கான இந்த திட்டம் "Azadi ka Amrit Mahotsav" இன் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்ட விவரங்கள்
இந்தத் திட்டம் 7.5% நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது. இத்திட்டத்தின் காலம் இரண்டு ஆண்டுகள். முதலீட்டு வரம்பு 2 லட்சம். இந்தத் திட்டம் பகுதி திரும்பப் பெறுதல் மற்றும் முதலீட்டு விருப்பங்களை வழங்குகிறது.
இந்த திட்டம் ஆண்டுக்கு 7.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது. காலாண்டு அடிப்படையில் வட்டி வரவு மற்றும் கணக்கில் சேர்க்கப்படும்.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழை திறக்க தகுதி?
இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க ஒரு பெண் தனது சொந்த பெயரிலோ அல்லது மைனர் பெண்னாக இருந்தால் பாதுகாவலரின் பெயரிலோ விண்ணப்பிக்கலாம்.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழை திறக்க தேவையான ஆவணங்கள்
முதலீட்டாளர்கள் தங்கள் பான் கார்டுகளின் நகல், ஆதார் அட்டை மற்றும் டெபாசிட் தொகையின் காசோலையுடன் தங்கள் உள்ளூர் தபால் நிலையங்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளுக்குச் சென்று திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் காலம்
ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.1,000 மற்றும் அதிகபட்சம் ரூ.2 லட்சம் முதலீட்டுத் செய்யலாம். இந்தத் திட்டம் ஒரு வருடத்திற்குப் பிறகு சில குறைந்தபட்ச அபராதக் கட்டணங்களுடன் முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதிக்கிறது.
Mahila Samman Saving Certificate, Nirmala Sitharaman, Saving Schemes for Women
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |