பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம் - முழு விபரம் இதோ...!
இந்தியாவில் பெண்களை நிதி ரீதியாக மேம்படுத்துவதற்கும் அவர்களின் சேமிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு அரசு மற்றும் தனியார் திட்டங்கள் காணப்படுகின்றது.
இந்தத் திட்டங்களுக்கு பல்வேறு பெயர்களும் நோக்கங்களும் உள்ளன. அந்தவகையில் இந்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்
மகிளா சம்மான் சேமிப்பு திட்டமானது இந்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் மூலமாக அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட முக்கியமான மூதலீட்டு திட்டமாக இது கருதப்படுகிறது.
மகளிருக்காக மட்டுமே இத்திட்டமானது நிர்மலா சீதாராமனால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு இந்தியப் பெண்ணும், வயதைப் பொருட்படுத்தாமல் இத்திட்டத்தின் கீழ் கணக்கு ஆரம்பித்து முதலீடு செய்யலாம்.
வயது வரம்பு
இந்த திட்டத்தின் கீழ் கணக்கு ஆரம்பிக்கவுள்ள பெண்கள் தங்களது கணக்கை திறந்துக்கொள்ள முடியும்.
ஆனால் 18 வயதை பூர்த்தி செய்யாத சிறுமிகள் தங்களது பாதுகாவலர்கள் அல்லது பெற்றோரின் துணையுடன் இதை ஆரம்பிக்கலாம்.
ஒரு பெண்ணுக்கு ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும். 18 வயதை எட்டியதும், கணக்கு தானாகவே மாறிவிடும்.
இந்த திட்டமானது அதிக லாபத்தை ஈட்டி தருவதால் அதிகமான பெண்களால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதிக லாபம் ஈட்டும் திட்டம்
இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டியானது காலாண்டுக்கு ஒரு முறை திரட்டப்படும். பின்னர் முதிர்ச்சியடைந்தவுடன் வழங்கப்படும்.
மொத்த முதலீட்டுத் தொகையானது எளிய வட்டி விகித சூத்திரத்துடன் கணக்கிடப்படுகிறது. நிலையான வைப்புத் தொகை மற்றும் தபால் அலுவலக வைப்பு திட்டங்கள் போல் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு கூட்டு வட்டி கணக்கிடப்படுகிறது. வட்டித் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதை உறுதி செய்கிறது.
மொத்த தொகை
முதலீட்டில் கிடைக்கும் வட்டியைக் கணக்கிடுவதற்காக எளிய வட்டி சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது. இது வட்டி விகிதம் மற்றும் முதலீட்டு காலத்தால் அசல் தொகையை அதிகரிக்கும்.
உதாரணமாக கூற வேண்டுமென்றால், ரூ. 2 லட்சம் முதலீடு செய்தால் முதல் காலாண்டிற்கு பின் ரூ. 3,750 வட்டியை பெறலாம்.
இரண்டாவது காலாண்டின் முடிவில் இதே தொகையை மீண்டும் முதலீடு செய்தால் ரூ. 3,820 ஆக உங்களது வட்டி இருக்கும்.
இதனடிப்படையில் நீங்கள் இத்திட்டத்தின் முதிர்ச்சியில் மொத்தம் ரூ. 2,32,044 பெறலாம்.
வட்டி விகிதம்
2023 தொடக்கும் 2025 ஆம் ஆண்டு வரையில் அதாவது இரண்டு வருட காலத்திற்கு 7.5 சதவீத நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதமானது முழு காலத்திலும் மாறாமல் இருக்கும்.
மூலத்தில் வரி விலக்கு (TDS)
2023 ஆம் ஆண்டு மே மாதம் 16 திகதியன்று மத்திய நேரடி வரிகள் வாரியம் மூலம் வெளியிட்ட அறிக்கையின் படி, இத்திட்டத்தில் இருந்து பெறப்படும் வட்டிக்கு வரி விலக்கு கிடையாது.
ஒரு நிதியாண்டில் சம்பாதித்த வட்டி 40,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் பிரிவு 194A இன் கீழ் TDS பொருந்தும்.
ஆண்கள் விண்ணப்பிக்கும் சாத்தியம்?
பெண்களுக்கான இந்த சிறப்புத் திட்டத்தில் ஆண்களும் முதலீடு செய்யலாமா என்ற கேள்வி கட்டாயம் எழுந்திருக்கும்.
ஆம். ஆண்களும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஆனால் தங்களது குடும்பத்தில் உள்ள பெண்களின் பெயரை வைத்து மாத்திரமே முதலீடு செய்ய முடியும்.
திரும்பப் பெறுதல்
முதலீடு செய்த ஒரு வருடத்திற்குப் பிறகு இந்தக் கணக்கிலிருந்து 40 சதவிகிதம் வரை பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.
கணக்கு வைத்திருப்பவரின் மரணம் அல்லது வேறு ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் அபராதம் செலுத்தாமல் இந்தக் கணக்கை முன்கூட்டியே மூடலாம்.
திறந்த திகதியில் இருந்து 6 மாதங்களுக்குள் காரணம் கூறாமல் கணக்கை மூடலாம். ஆனால் கட்டணமாக குறிப்பிட்ட ஓர் தொகையை செலுத்த வேண்டும்.
சேமிப்புச் சான்றிதழைத் தொடங்கும் முறை
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழைத் தொடங்குவதற்கு இரண்டு முறைகள் உள்ளன. வங்கி மூலமாகவும் மற்றும் அருகிலுள்ள தபால் நிலையத்தின் மூலமாகவும் ஆரம்பிக்கலாம்.
எந்த வங்கிகள் சான்றிதழை வழங்குகின்றன?
அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் தகுதியான தனியார் துறை வங்கிகளுக்கு மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை நிர்வகிப்பதற்கான அங்கீகாரம் இருக்கிறது.
- பரோடா வங்கி
- கனரா வங்கி
- இந்திய வங்கி
- பஞ்சாப் தேசிய வங்கி
- இந்திய யூனியன் வங்கி
- இந்திய மத்திய வங்கி
பதிவு செய்வதற்கு தேவையான முக்கிய ஆவணங்கள்
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் கணக்கைத் தொடங்கும்போது, உங்கள் அடையாளத்தையும் முகவரியையும் சரிபார்க்க சில ஆவணங்களை நீங்கள் சமர்பிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
- ஆதார் அட்டை
- வாக்காளர் பத்திரம்
- ஓட்டுநர் உரிமம்
- PAN அட்டை
- KYC ஆவணங்கள்
- வைப்பு தொகையின் காசோலைகள்
மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே சேமிப்பு மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம், அனைவருக்கும் நிதி ரீதியாக பாதுகாப்பான எதிர்காலத்தை வடிவமைப்பதில் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |