இலங்கை பிரதமர் ராஜபக்ச தமிழில் தீபாவளி வாழ்த்து
உலகெங்கும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தமிழில் வாழ்த்து கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
சாதி மத பேதமின்றி அனைவரும் கொண்டாடும் பண்டிகை தீபாவளி, இன்று உலக மக்கள் பலரும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
புத்தாடை உடுத்தி, இனிப்புகளை பகிர்ந்து, பட்டாசு வெடித்து நண்பர்கள், உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மகிந்த ராஜபக்ச, தமிழில் வாழ்த்து கூறியுள்ளார்.
டுவிட்டரில், “அறியாமை இருள் அகற்றி அன்பெனும் ஓளியேற்றி அனைவரும் ஒன்றிணைவோம் இத்தீபாவளித்திருநாளில்! ” என தலைப்பிட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், இருள் நீங்க வேண்டும் என்றால் ஒளி ஏற்ற வேண்டும். இலங்கை மக்களின் துன்பம் அனைத்தும் நீங்கி, ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியுடனும் வாழும் காலம் மலரட்டும்.
தீபாவளி நன்னாளிலே இப்பிரார்த்தனையுடன் அன்பு நிறைந்த உள்ளத்துடன் தீப ஒளி ஏற்றுவோம் என சிங்களத்தில் பேசும் மகிந்த ராஜபக்ச வீடியோவின் இறுதியாக உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
அறியாமை இருள் அகற்றி
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) November 4, 2021
அன்பெனும் ஓளியேற்றி
அனைவரும் ஒன்றிணைவோம்
இத்தீபாவளித்திருநாளில்! #Deepavali #Festivemood #Diwali #தீபாவளி #HappyDiwali pic.twitter.com/VZ9cGhSU3C