கொழும்பில் போராட்டம் வெடித்த நிலையில் மகிந்த ராஜபக்சா விடுத்த வேண்டுகோள்!
பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்வதாக மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
அவரின் டுவிட்டர் பதிவில், இலங்கையில் நமது பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் மற்றும் வன்முறையானது மேலும் வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நாம் இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு பொருளாதார தீர்வு தேவை, அதை தீர்க்க இந்த நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.
இன்று காலை அலரிமாளிகைக்கு வந்து அமைதியான முறையில் கலைந்து சென்ற மக்கள் மத்தியில் திரண்ட ஒரு குழுவினரால் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பதற்றமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் மகிந்த இந்த முக்கிய பதிவை வெளியிட்டுள்ளார்.
While emotions are running high in #lka, I urge our general public to exercise restraint & remember that violence only begets violence. The economic crisis we're in needs an economic solution which this administration is committed to resolving.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) May 9, 2022