ஹூண்டாயின் 25 ஆண்டுகால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மஹிந்திரா சாதனை
தென் கொரிய நிறுவனமான ஹூண்டாயின் 25 ஆண்டுகால ஆதிக்கத்திற்கு மஹிந்திரா நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பாரிய கார் நிறுவனமாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஹூண்டாயை முந்தி சாதனை படைத்துள்ளது.
2025 ஜனவரி முதல் ஜூலை வரை மஹிந்திரா 3,51,065 வாகனங்களை விற்றுள்ளது. இது ஹூண்டாயின் 3,29,782 விற்பனை எண்ணிக்கையை விட 21,283 யூனிட்கள் அதிகம்.
கடந்த ஆண்டு இதே காலத்தில் மஹிந்திரா 2,91,971 வாகனங்களை விற்றிருந்தது. அதன்படி, இந்த ஆண்டு 20.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
ஹூண்டாய் 3,58,785 வாகனங்களை விற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 8.1 சதவீதம் குறைந்து 3,29,782 ஆகியுள்ளது.
ஹூண்டாயின் விற்பனை குறைவிற்கு முக்கிய காரணம், Creta மீதான அதிக நம்பிக்கை என்றும் புதிய தயாரிப்புகளின் பற்றாக்குறை என்றும் கூறப்படுகிறது.
மஹிந்திராவின் வெற்றிக்கு காரணம், XUV 3XO, Thar, TharRoxx, Scorpio, Scorpio N போன்ற கார்கள் மற்றும் BE 6 மற்றும் XEV 9e ஆகிய புதிய கார்கள் என ICE மற்றும் EV இரண்டிலும் வெற்றிகரமாக இருப்பது தான்.
அதுமட்டுமின்றி, அடுத்த சில மாதங்களில் குறைந்தது 2 புதிய மொடல்களை வெளியிட மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
மஹிந்திராவின் இந்த வளர்ச்சி உள்நாட்டு நிறுவனங்களின் திறன் மற்றும் சந்தை புரிதலை பிரதிபலிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mahindra vs Hyundai 2025, India car sales ranking, Mahindra SUV sales growth, Hyundai Creta decline, Top carmakers in India, Mahindra electric vehicles, Hyundai market share drop, Indian automotive trends, Mahindra overtakes Hyundai