மஹிந்திராவின் புதிய Bolero வரிசை அறிமுகம்: விலை ரூ.7.99 லட்சம் முதல் ரூ.9.99 வரை
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது பிரபலமான Bolero SUV-யின் புதிய வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய மொடல்கள் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பும், நவீன வசதிகளும் கொண்டதாக உள்ளன.
முக்கியமாக Bolero B8 மற்றும் Bolero Neo N11 எனும் மேம்பட்ட வகைகள், இளம் தலைமுறை மற்றும் நகர்ப்புற வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய Bolero மொடல்களின் விலை ரூ.7.99 லட்சம் முதல் ரூ.9.69 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், Bolero Neo மொடல்கள் விலை ரூ.8.49 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய Bolero-வில் Stealth Black எனும் புதிய நிறம், diamond-cut R15 அலாய் வீல்கள், fog lamps, மற்றும் 17.8cm touchscreen infotainment system உள்ளது.
Neo மாடலில் R16 அலாய் வீல்கள், Jeans Blue மற்றும் Concrete Grey போன்ற புதிய நிறங்கள், Mocha Brown மற்றும் Lunar Grey எனும் interior தீம்கள், 22.8cm touchscreen மற்றும் RideFlo Tech suspension அமைப்புகள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |