SUV மொடல்களுக்கு தள்ளுபடியை வழங்கிய மஹிந்திரா.., ரூ.2.5 லட்சம் வரை சேமிக்கலாம்
ஜிஎஸ்டி 2.0 அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மஹிந்திரா தனது எஸ்யூவி மாடல்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளில் ஒன்றை வழங்குகிறது.
விலை குறைப்பு
ஜிஎஸ்டி வரி மாற்றங்களால் வாடிக்கையாளர்கள் இப்போது மஹிந்திரா எஸ்யூவியை வாங்கும்போது நேரடியாகப் பயனடையலாம்.
ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களின் கீழ், பி-பிரிவு (4 மீட்டருக்கு கீழ்) எஸ்யூவிகளுக்கான வரி அடுக்கை அரசாங்கம் 29-31% இலிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது.
இந்த மாற்றம் குறிப்பாக 1.2 லிட்டர் வரை Petrol engines மற்றும் 1.5 லிட்டர் வரை Diesel engines கொண்ட SUV-களுக்கு பொருந்தும்.
Bolero/Bolero Neo
ரூ.1.27 லட்சம் ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் தோராயமாக ரூ.1.29 லட்சம் கூடுதல் சலுகைகள் உட்பட ரூ.2.56 லட்சம் வரை மொத்தமாக சேமிக்கலாம்.
XUV300 (Petrol variant)
ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிறகு ரூ.1.4 லட்சம் வரை தள்ளுபடியால் ரூ.2.46 லட்சம் வரை மொத்தமாக சேமிக்கலாம். இதுவே டீசல் வகைக்கு ரூ.1.56 லட்சம் வரை ஜிஎஸ்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Thar 2WD (Diesel)
ரூ.1.35 லட்சம் வரை ஜிஎஸ்டி குறைப்பால் ரூ.1.55 லட்சம் வரை மொத்தமாக சேமிக்கலாம்.
Thar 4WD and Thar RXZ
ரூ.1.01-1.33 லட்சம் வரை ஜிஎஸ்டி குறைப்பால் ரூ.1.53 லட்சம் வரை மொத்தமாக சேமிக்கலாம்.
Scorpio Classic and Scorpio-N
இதன் ஜிஎஸ்டி சேமிப்பு முறையே தோராயமாக ரூ.1.01 லட்சம் மற்றும் ரூ.1.45 லட்சம் வரை ஆகும். அதன்படி கூடுதல் சலுகைகளுடன், மொத்த சேமிப்பு ரூ.1.96 லட்சத்திலிருந்து ரூ.2.16 லட்சம் வரை இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |