மஹிந்திரா Thar ROXX-ன் மாஸான முன்புற தோற்றம்.! ஆகஸ்ட் 15-ஆம் திகதிக்காக காத்திருக்கும் மக்கள்
Mahindra & Mahindra நிறுவனம் ஆகஸ்ட் 15-ஆம் திகதி Mahindra-வின் மிகவும் பிரபலமான Off-Road SUV Thar இன் 5-கதவு பதிப்பை அறிமுகப்படுத்த உள்ளது.
முன்னதாக, நிறுவனம் சமூக ஊடக தளமான X-ல் காரின் முன்புற தோற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது.
பகிரப்பட்ட படம் Thar ROXX-ன் புதிய Front Grill மற்றும் LED projector headlamps இரண்டையும் காட்டுகிறது.
இதன் ஆரம்ப விலை சுமார் ரூ .15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இது வரவிருக்கும் 5-Door Force Gurkha-விற்கு போட்டியாக இருக்கும்.
வரவிருக்கும் 5-கதவு Mahindra Thar SUVயின் வடிவமைப்பைப் பற்றி பேசுகையில், இது தற்போதைய 3-கதவு தாரின் அதே பாரம்பரிய boxy profile-உடன் வரும், ஆனால் அது பல மாற்றங்களைக் காணும்.
புதிய டீஸர் படம் Thar காரின் பல மேம்படுத்தல்களைக் காட்டுகிறது, இது மூன்று-கதவு Thar இலிருந்து வேறுபடுகிறது. fog lights மற்றும் turn indicators அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன, ஆனால் அவற்றின் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது.
இது தவிர, வரவிருக்கும் எஸ்யூவியில் ஆறு vertical double-slat, வட்ட வடிவ மேம்பட்ட எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஹெட்லேம்ப்களில் C-வடிவ எல்இடி டிஆர்எல்கள், செங்குத்தான டெயில்லேம்ப்கள், புதிய வடிவமைப்புடன் சில்வர் பம்பர்கள், டூயல்-டோன் ORVMs, புதிய அலாய் வீல்கள், டெயில்கேட் பொருத்தப்பட்ட ஸ்பேர் வீல் மற்றும் தட்டையான கூரை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
காரின் கேபினில் உள்ள இருக்கைகள் பழுப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. பனோரமிக் சன்ரூஃப், பெரிய 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இதேபோன்ற அளவிலான டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், முன் ஆர்ம்ரெஸ்ட், புதிய ஸ்டீயரிங் வீல், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, சீலிங் மவுண்டட் ஸ்பீக்கர்கள் மற்றும் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.
பாதுகாப்பிற்காக, Thar 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ஹில் ஹோல்ட் மற்றும் டிசென்ட் கண்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.
adaptive cruise control, lane keep assist, autonomous emergency braking போன்ற ADAS தொழில்நுட்பமும் இதில் அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mahindra & Mahindra Limited, Thar ROXX photos, Mahindra Thar ROXX, 5 Door Thar