Mahindra XUV3XO நாளை அறிமுகம்., சிறப்பம்சங்கள், விலை என்ன?
மஹிந்திரா & மஹிந்திரா நாளை (ஏப்ரல் 29) இந்தியாவில் Sub-4 Metre compact SUV பிரிவில் XUV3XO காரை அறிமுகப்படுத்த உள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த கார் பனோரமிக் சன்ரூஃப் வழங்கும் இந்தியாவின் முதல் சப்-காம்பாக்ட் SUV ஆகும்.
இந்த கார் இது லிட்டருக்கு 20.1 கிமீ மைலேஜ் தரும் என கூறப்படுகிறது.
இந்திய கார் தயாரிப்பாளரான மஹிந்திரா டீஸர்கள் மூலம் இந்த புதிய காரின் பல அம்சங்களை பகிர்ந்துள்ளது.
இதில் 10.25 inch thouch screen infotainment system, 10.25 inch digital driver display, 7 speaker Harman Kardon sound system, connected car technology மற்றும் climate control போன்ற அம்சங்கள் வழங்கப்படும்.
connected car technology மூலம் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து ஏசியைக் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் காரில் அமரும் முன் கேபினை குளிர்விக்க முடியும்.
இந்த கார் Mahindra XUV300-ன் Facelift ஆகும், இது இப்போது XUV3XO என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும்.
Mahindra XUV3XO-ன் விலை ரூ.9 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
இந்த பிரிவில், இது Maruti Brezza, Hyundai Venue, Kia Sonet, Tata Nexon, Renault Kiger, Nissan Magnite, Maruti Suzuki Swift மாறும் Toyota Urban Cruiser ஆகியவற்றுடன் போட்டியிடும்.
இந்தக் காரில் பாதுகாப்பிற்காக, 6 airbags, electronic parking brake, 360-degree camera அம்சங்களுடன் Advanced Driver Assistance System (ADAS) வழங்கப்படலாம்.
XUV 3XO-ல் 4 இன்ஜின் விருப்பங்களைக் காணலாம்
தற்போதைய மாடலின் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் விருப்பங்களுடன் மஹிந்திரா XUV 3XO வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் (TGDI) இன்ஜின் ஆகியவை அடங்கும்
இருப்பினும், இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் TGDI எஞ்சின் வழங்கப்படலாம், இது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mahindra XUV3XO Launch, Mahindra XUV 3XO Car, Mahindra and Mahindra, Mahindra XUV 30O facelift, Mahindra XUV 3XO price