Mahindra XUV700 விலை ரூ.1.43 லட்சம் வரை விலை குறைப்பு
Mahindra நிறுவனம் XUV700 காரின் விலையை கணிசமாக குறைத்துள்ளது.
2025 செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும் GST மாற்றத்தின் பயன்களை வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே வழங்கும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய SUV வாகனங்களுக்கான GST விகிதம் 48 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் ரூ.88,900 முதல் ரூ.1.43 லட்சம் வரை சேமிக்க முடியும்.
GST மாற்றத்தால் XUV700 மொடல்களில் ஏற்படும் விலை குறைப்பு விவரம்
- MX: ரூ.88,900
- AX3: ரூ.1,06,500
- AX5 S: ரூ.1,10,200
- AX5: ரூ.1,18,300
- AX7: ரூ.1,31,900
- AX7 L: ரூ.1,43,000
இந்த வாகனம் 4 மீற்றர் நீளம் மற்றும் 1,500cc-க்கு மேற்பட்ட எஞ்சின் கொண்ட SUV வகையைச் சேர்ந்தது.
இதற்கான முந்தைய GST 28 சதவீதம் மற்றும் 20 சதவீதம் cess சேர்த்து மொத்தம் 48 சதவீதமாக இருந்தது. புதிய கட்டமைப்பில், இது 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
XUV700 மட்டுமன்றி, மஹிந்திராவின் பல்வேறு மொடல்களுக்கும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
Bolero, Bolero Neo, XUV 3XO, Thar, Thar Roxx, Scorpio Classic, Scorpio-N ஆகிய மொடல்கள் மற்றும் அதன் வகைகளுக்கு ரூ.1.27 லட்சம் முதல் ரூ.1.56 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mahindra XUV700 GST price cut 2025, XUV700 new price after GST change, Mahindra SUV price drop India, GST impact on SUV prices 2025, Mahindra XUV700 variant-wise savings, Mahindra Bolero Neo price cut, Thar 2WD and 4WD new prices, Scorpio-N GST discount 2025, Mahindra car offers September 2025