அறிமுக போட்டியிலே 6 விக்கெட்கள்; 38 ஆண்டுகால சாதனையை முறியடித்த மாலி பியர்ட்மேன்
mahli beardman take 6 wickets on debut match australia beats england: இங்கிலாந்திற்கு எதிரான முதல் ODI போட்டியில், மாலி பியர்ட்மேனின் அபார பந்துவீச்சால் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா வெற்றி
அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

பெர்த்தில் இன்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய இங்கிலாந்து அணி, Mahli Beardmanனின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 33.4 ஓவர்கள் முடிவில் 131 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக Gus Atkinson 29 ஓட்டங்களும், Tom Banton மற்றும் Will Jacks தலா 25 ஓட்டங்களும் குவித்தனர்.
அறிமுக போட்டியிலே 6 விக்கெட்கள்
அவுஸ்திரேலியா தரப்பில், 21 வயதான Mahli Beardman தனது அறிமுக போட்டியிலே 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

132 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா, 23.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்கள் குவித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மிச்செல் மார்ஷ் 50 ஓட்டங்கள் குவித்தார்.
முன்னதாக 1988ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய வீரர் டோனி டோட்மைட், இலங்கைக்கு எதிரான அறிமுக ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவுஸ்திரேலிய வீரரின் சிறந்த பந்துவீச்சாக இருந்தது.
தற்போது, பியர்ட்மேன் அந்த 38 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.