மகளிர் டி20 உலககோப்பையில் முதல் சதம்! புதிய வரலாறு படைத்த வீராங்கனை
கேப்டவுனில் நடந்த மகளிர் டி20 உலககோப்பையில் போட்டியில் பாகிஸ்தான் அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
அதிரடியில் மிரட்டிய முனீபா அலி
நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியில் விக்கெட் கீப்பர் முனீபா அலி ருத்ர தாண்டவம் ஆடினார்.
அவரது அதிரடியில் பாகிஸ்தானின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பவுண்டரிகளை விரட்டிய முனீபா, தனது முதல் டி20 சதத்தினை பதிவு செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 68 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் அவர் 102 ஓட்டங்கள் எடுத்தார்.
A magnificent century by @MuneebaAli17 propels ?? to a total of 165 runs!#T20WorldCup #BackOurGirls #PAKvIRE pic.twitter.com/O9KMuIgLfd
— Pakistan Cricket (@TheRealPCB) February 15, 2023
டி20யில் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை முனீபா அலி படைத்தார். அதேபோல், நடப்பு டி20 தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும். நிதா தர் 33 ஓட்டங்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் குவித்தது.
@TheRealPCB(Twitter)
சுருண்ட அயர்லாந்து
பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது. நஷ்ரா சந்து மற்றும் நிதா தரின் துல்லியமான பந்துவீச்சில், அயர்லாந்து வீராங்கனைகள் ஆட்டமிழந்ததால் 16.3 ஓவரில் 95 ஓட்டங்களுக்கு சுருண்டது.
@IrishWomensCric(Twitter)
Terrific performance as Pakistan clinch their first win of the tournament ?#T20WorldCup | #BackOurGirls | #PAKvIRE pic.twitter.com/qKm9pKXvBJ
— Pakistan Cricket (@TheRealPCB) February 15, 2023
பாகிஸ்தானின் நஷ்ரா சந்து 4 விக்கெட்டுகளையும், நிதா தர் மற்றும் சதியா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பாகிஸ்தான் பதிவு செய்தது.
@TheRealPCB(Twitter)