2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்
2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.
பள்ளிகள் திறப்பு
செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி பிரான்சில் பள்ளிகள் திறக்கவிருக்கின்றன.
பாரா ஒலிம்பிக் போட்டிகள்
செப்டம்பர் 8ஆம் திகதி வரை பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
சாலைக் கட்டுப்பாடுகள்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக சாலைகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் செப்டம்பர் 11ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றன.
Mont Blanc சுரங்கப்பாதை மூடல்
பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ள Mont Blanc சுரங்கப்பாதை, முதல் கட்ட சோதனை பராமரிப்புப் பணிகளுக்காக, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் மூன்றரை மாதங்களுக்கு மூடப்படுகிறது.
டிசம்பர் மாதம் 16ஆம் திகதி, மீண்டும் சுரங்கப்பாதை பயன்பாட்டுக்காக திறந்துவிடப்படும்.
பள்ளி பாடத்திட்டம்
பிரான்ஸ் பள்ளிகளில், பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. உதாரணமாக, கால்நடைகள் நலன் முதலான சில பாடங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன.
வேலைநிறுத்தங்கள்
ஆசிரியர் யூனியன்கள் செப்டம்பர் 10ஆம் திகதியன்று, ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை வேலை நிறுத்தம் செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளன.
தொழிலாளர் யூனியன் ஒன்றும், செப்டம்பர் இறுதியில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்துள்ளது.
பார்க்கிங் கட்டணம் அதிகரிப்பு
பாரீஸில் வாகனங்கள் பார்க்கிங் கட்டணம், செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி முதல், மூன்று மடங்காக அதிகரிக்க உள்ளது.
கூடுதல் ரயில் பெட்டிகள்
பிரான்சில் பள்ளிகள் துவங்கும் நேரத்தில், Ile-de-France பகுதியில் பயணிக்கும் சில ரயில்களில், கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
விமான நிலைய விதிகள்
செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி முதல், விமானத்தில் 100 மில்லிலிற்றருக்கு மேல் எந்த திரவங்களையும் கொண்டு செல்லக்கூடாது என்னும் விதி மீண்டும் அமுலுக்கு வருகிறது.
எரிவாயு கட்டணம்
The Commission de Régulation de l'Énergie (CRE) அமைப்பு, செப்டம்பர் மாதத்துக்கான எரிவாயு கட்டணம் ஒரு சதவிகிதம் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |