இந்தியர்களுக்கான அமெரிக்கா விசா நடைமுறைகளில் முக்கிய மாற்றம் - மாறாதது என்ன?
இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல திட்டமிடுபவர்களுக்கு விசா நடைமுறையில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்வது அவசியமாக உள்ளது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள்(USCIS), பாஸ்போர்ட் சேகரிப்பு, புதிய கட்டணம், நேர்காணல் விலக்கு ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
பாஸ்போர்ட் சேகரிப்பு
1 ஆகஸ்ட் 2025 முதல் 18 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களை தவிர, மற்ற யாரும் மூன்றாம் தரப்பு மூலம் விண்ணப்ப மையத்தில் இருந்து பாஸ்போர்ட் பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நீங்கள் நேரில் சென்றோ அல்லது கட்டண விநியோக சேவை மூலமோ பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ளலாம்.
18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் பாஸ்போர்ட்டை பெறலாம்.
ஆனால், பெற்றோர் இருவரின் கையெழுத்திட்ட அதிகார கடிதம் அவசியம். மின்னஞ்சல் அல்லது ஸ்கேன் செய்யப்பட்ட கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
ரூ.1200 செலுத்துவதன் மூலம், வீடு அல்லது அலுவலகத்திற்கு நேரடியாக பாஸ்போர்ட் விநியோகிக்கும் சேவையை தூதரகம் வழங்குகிறது.
ustraveldocs.com தளத்தில் உங்கள் கணக்கில் நுழைந்து, டெலிவரி விருப்பங்களைப் தேர்வு செய்யலாம்.
விசா Integrity கட்டணம்
கடந்த 4 ஜூலை 2025 ஆம் ஆண்டு நிறைவேற்றபட்ட One Big Beautiful Bill, புதிய கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
குடியேற்றமற்ற விசா விண்ணப்பங்களுக்கு 250 டொலர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1 அக்டோபர் 2025 முதல் இந்த புதிய கட்டணம் அமுலுக்கு வர உள்ளது.
விசா விதிமுறைகளுக்கு இணங்கும் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணத்தை திரும்ப பெறலாம்(Refund) என கூறப்படுகிறது. இது குறித்த முழுமையான விளக்கம் வெளியாகவில்லை.
விசா நேர்காணல் திட்டம்
முன்னதாக நேர்காணலை தவிர்க்க முடிந்தவர்கள் பெரும்பாலும் இனி அமெரிக்கா தூதரகம் அல்லது துணை தூதரகத்திற்கு நேர்காணலுக்காக நேரில் செல்ல வேண்டும்.
H, L, F, M, J, E, O பிரிவில் வருபவர்கள் நேரில் ஆஜராக வேண்டும்.
14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 79 வயது அதிகமானோருக்கு வழங்கப்பட்டிருந்த நேரில் ஆஜராவதற்கான விலக்கு நீக்கப்பட்டுள்ளது.
விலக்கு தொடரும் விசா வகைகள்
A-1, A-2 விசா
G-1 முதல் G-4 விசா
சில C-3 விசாக்கள்
NATO -1 முதல் NATO -6 விசாக்கள்
TECRO E-1 விசாக்கள்
மாறாமல் உள்ள விசா நடைமுறைகள்
விசா கட்டணம் 365 நாட்களுக்கு செல்லுப்படியாகும். அதிகாரபூர்வ தளத்தின் மூலம் முன்பதிவுகளை மேற்கொள்ளலாம்.
தேவையான ஆவணங்களின் பட்டியல் மாறாமல் உள்ளது.
Dropbox சந்திப்பு ரத்து செய்யப்பட்டால் என்ன செய்வது?
ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் உங்களது Dropbox சந்திப்பு ரத்து செய்யப்பட்டால் ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரபூர்வ மின்னஞ்சலை சரிபார்த்து கொள்ளுங்கள்.
விசா சுயவிவரத்தில் மீண்டும் உள்நுழைந்து மீண்டும் schedule செய்யுங்கள்.
புதுப்பிக்கப்பட்ட தகுதி கேள்விகளை பூர்த்தி செய்து மீண்டும் செயல்முறையை தொடங்குங்கள்.
பணம் செலுத்திய MRV ரசீதுகளை மீண்டும் ஒருமுறை schedule அல்லது ReSchedule செய்ய பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |