பிரான்சில் ஜூன் மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள்...
ஒவ்வொரு புதிய மாதமும், பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. அவ்வகையில், ஜூன் மாதம் பிரான்சில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வருகிறது என்பதைப் பார்க்கலாம்...
நாடாளுமன்றத் தேர்தல்
பிரான்சில் ஏற்கனவே முடிந்தது போக, மேலும் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. பிரான்ஸ் வாக்காளர்கள், ஜூன் மாதம் 12ஆம் திகதியும், 19ஆம் திகதியும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்க உள்ளார்கள்.
வருமான வரி தாக்கல் செய்யும் நேரம்
நீங்கள் பிரான்சின் 55 முதல் 96 வரையிலான départementகளில் ஒன்றிலோ, அல்லது கடல் கடந்த பிரதேசங்களிலோ வாழ்வீர்களானால், நீங்கள் வருமான வரி செலுத்துவதற்கான கடைசி நாள் ஜூன் 8ஆம் திகதி ஆகும்.
கோடை விற்பனை துவக்கம்
நாட்டின் சில பகுதிகள் தவிர்த்து, பெரும்பாலான பகுதிகளில் கோடை விற்பனை ஜூன் 22ஆம் திகதி துவங்கி, ஜூலை 19 வரை நடத்தப்பட உள்ளது.
பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் முடிவுக்கு வருகின்றன
ஜூன் 4ஆம் திகதி, பெண்களுக்காக ஒற்றையர் ஆட்டத்தின் இறுதி போட்டியும், ஜூன் 5ஆம் திகதி ஆண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தின் இறுதி போட்டியும் நடைபெற உள்ளன. அத்துடன், Roland-Garros tournament முடிவுக்கு வருகிறது.
The Champs-Elysées திரைப்பட விழா
The Champs-Elysées திரைப்பட விழா ஜூன் 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
எரிவாயு விலை உயர்வு
Engie நிறுவனம் வழங்கும் எரிவாயுவின் விலை ஜூன் 1 முதல் 4.4 சதவிகிதம் உயர இருந்த நிலையில், ஜூன் இறுதி வரை அந்த விலை உயர்வை அரசு நிறுத்திவைத்துள்ளது. மேக்ரான் அரசு, இந்த ஆண்டு இறுதி வரை அந்த விலை உயர்வை நிறுத்து வைக்க விரும்பினாலும், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும் ஒரு நிலை உருவாகியுள்ளது.
கடன் காப்பீடு
ஜூன் 1 முதல் The ’Lemoine law’ என்னும் சட்டம் பகுதி அமுலுக்கு வர உள்ளது. (அதாவது, அது புதிய ஒப்பந்தங்களுக்கு மட்டுமே பொருந்தும்.) இந்த சட்டம் மூலமாக, உங்கள் கடன் காப்பீட்டை எந்தக் கட்டத்திலும் ரத்து செய்துவிட்டு, சற்று செலவு குறைவான அல்லது அதிக உத்தரவாதங்கள் கொண்ட ஆஃபரை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கும் என்பது போன்ற சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.