சுவிட்சர்லாந்தில் ஜூலை மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள்
எல்லை கடந்து பணிக்கு வருவோர் தொடர்பில் புதிய சட்டங்கள் முதல், புதிய சாரதிகளுக்கு புதிய விதிகள் வரை, சுவிட்சர்லாந்தில் ஜூலை மாதத்தில் பல மாற்றங்கள் நிகழவிருக்கின்றன.
அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
ஜூலை 1ஆம் திகதி
எல்லை கடந்து பணிக்கு வருவோருக்கு ஒரு செய்தி
சுவிட்சர்லாந்து சமீபத்தில் பிரான்சிலிருந்து எல்லை கடந்து வந்து பணியாற்றும் பணியாளர்கள் வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்வதற்கான விதிகளை எளிதாக்கியது.
தற்போது, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா நாடுகளிலிருந்தவண்ணம் பணியாற்றுவோருக்கான, வரி செலுத்துவது தொடர்பான விதிகளும் நெகிழ்த்தப்பட உள்ளன.
ஜூலை 1 மற்றும் 2ஆம் திகதிகள்
நாடாளுமன்றத்தில் பொதுமக்களுக்கு அனுமதி நாடாளுமன்றம் மற்றும் பெடரல் நிறுவனங்களில் ஜூலை 1 மற்றும் 2ஆம் திகதிகளில் பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் பொதுமக்களுக்கு அனுமதி
நாடாளுமன்றம் மற்றும் பெடரல் நிறுவனங்களில் ஜூலை 1 மற்றும் 2ஆம் திகதிகளில் பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படும்.
ஓநாய் வேட்டை
ஜூலை 1ஆம் திகதி முதல், கால்நடைகளை தாக்கவரும் பட்சத்திலும், மக்கள் வாழும் இடங்களுக்கு அருகில் வரும் பட்சத்திலும், ஓநாய்களைக் கொல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
என்றாலும், மாகாணங்கள் முதலில் அதற்காக பெடரல் சுற்றுச்சூழல் அலுவலகத்தில் ஒப்புதல் பெறவேண்டும்.
அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
விடுமுறை திகதியில் மாற்றம் இருந்தாலும், சுவிட்சர்லாந்து முழுவதும் பிள்ளைகளுக்கு ஆறு வார கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
ஜூலை 15
புதிய சாரதிகளுக்கான விதிகள்
புதிய சாரதிகளுக்காக புதிய விதிகள் ஜூலை 15 அன்று அமுலுக்கு வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |