ஜேர்மனியில் மே மாதம் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள் சில...
கோவிட் விதிகள் மாற்றம் முதல், மதுபான விலை உயர்வு வரை மே மாதத்தில் ஜேர்மனி பல மாற்றங்களை சந்திக்க இருக்கிறது.
அவற்றில் சில மாற்றங்கள் குறித்து இந்த செய்தியில் காணலாம்...
கோவிட் விதிகள் நீக்கம்
Hamburg மற்றும் Mecklenburg-Western Pomerania ஆகிய மாகாணங்களில் மட்டும் கோவிட் விதிகள் தொடர்ந்த நிலையில், ஏப்ரல் இறுதியுடன் அவை விலக்கிக்கொள்ளப்படுகின்றன.
குறைந்த விலை பயணச்சீட்டு முன்கூட்டியே விற்பனை
விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், மூன்று மாதங்களுக்கு குறைந்த விலை பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது ஜேர்மனி. அது ஜூன் மாதம்தான் விற்பனைக்கு வருகிறது என்றாலும், சில பயண சேவை வழங்குவோர் முன்கூட்டியே அந்த பயணச்சீட்டை விற்பனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்லைன் வங்கிச்சேவை
Postbank வங்கிக்கணக்கு வைத்திருப்போருக்கு, மே மாதம் முதல் வங்கி அட்டை மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் முறை முடிவுக்கு வருகிறது. அதற்குப் பிறகு, ஆப் ஒன்று மூலம் ஒன்லைன் வங்கிப்பரிவர்த்தனை செய்யும் BestSign என்னும் முறை பயன்பாட்டுக்கு வருகிறது.
மதுபான விலை உயரலாம்
ஏற்கனவே மக்கள் மளிகைப்பொருட்கள் மற்றும் எரிவாயு முதலான பொருட்கள் விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், இப்போது பியர் என்னும் மதுபானத்தின் விலை உயர உள்ளதாக தெரியவந்துள்ளது.
தள்ளுபடி உணவின் லேபிலில் (label) மாற்றம்
காலாவதியாகப்போகும் உணவுப்பொருட்களின் லேபிலில் முன்பு தள்ளுபடி விலை கொடுக்கப்பட்டிருக்கும். மே மாத இறுதியிலிருந்து, புதிய விலை கொடுக்கப்படாமல் ‘30 சதவிகிதம் விலை குறைவு’ என்பது போன்ற விவரம்தான் கொடுக்கப்பட்டிருக்கும்.
விலை ஒப்பீடு எளிதாக உள்ளது
பல்பொருள் அங்காடிகளில் பொருட்களின் விலைகளை வாடிக்கையாளர்கள் ஒப்பிட்டுப் பார்க்கும் முறை மே 28 முதல் எளிதாக உள்ளது.
ஒன்லைன் ஷாப்பிங்கில் கூடுதல் பாதுகாப்பும் தெளிவும்
ஒன்லைன் ஷாப்பிங்கில் குழப்பமான அறிவிப்புகள், பாதுகாப்பற்ற தன்மை ஆகியவற்றிற்கு விடை கொடுக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு தெளிவும் பாதுகாப்பும் அளிக்கும் வகையில் ஒன்லைன் ஷாப்பிங் ஒழுங்குபடுத்தப்பட உள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி யோகரட்ணம் தில்லைநாதர் மூர்த்தி
Ipoh, Malaysia, London, United Kingdom, சென்னை, India, கொழும்பு
09 May, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022