செவ்வாய்க்கிரகத்தில் உயிர்கள் உள்ளனவா என்னும் ஆராய்ச்சியில் ஒரு முக்கிய கண்டுபிடிப்பு
செவ்வாய்க்கிரகத்தில் உயிர்கள் உள்ளனவா என கண்டறியும் ஆராய்ச்சியில் அரிய விடயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிரகத்தில் தண்ணீர்
செவ்வாய்க்கிரகத்தில் உயிர்கள் உள்ளனவா என கண்டறியும் ஆராய்ச்சியின்போது, அங்குள்ள உயரிய எரிமலைகளில் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Image: Getty Images/iStockphoto
செவ்வாய்க்கிரகத்திலுள்ள Tharsis volcano என்னும் எரிமலைகளில் இப்படி உறைந்த நிலையில் தண்ணீர் கண்டுபிடிக்கப்படுவது மிக முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
Image: / SWNS
ஏனென்றால், இந்த கண்டுபிடிப்பு, செவ்வாய்க்கிரகத்தில் உயிர்கள் வாழ்வது குறித்து முன்னர் நிலவிய கருத்துக்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளதாகவும், பூமியைத் தவிர்த்து மற்ற கிரகங்களில் உயிர்கள் வாழ்கின்றனவா என தேடும் ஆய்வில், இது முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
Image: Getty Images/Moment RF
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |