சக அதிகாரிகளின் மனைவிகளிடம் வம்பு செய்த இராணுவ அதிகாரி: பெண் அதிகாரி தற்கொலை செய்யும் அளவுக்கு பிரித்தானிய இராணுவத்தில் அத்துமீறல்கள்
பிரித்தானிய இராணுவத்தில் பெண்களிடம் அத்துமீறல்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்துள்ள நிலையில், சக அதிகாரிகளின் மனைவிகளிடம் வம்பு செய்த இராணுவ அதிகாரி ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சார்ஜண்ட் மேஜர் என்னும் பட்டம் பெற்ற இராணுவ அதிகாரியான Mike Ransley என்பவர் மீது, இராணுவ விருந்து ஒன்றின்போது, சக அதிகாரிகளின் மனைவிகள் மீது கைவைக்க முயன்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
விருந்தில் மதுபானம் தாராளமாக வழங்கப்பட்ட நிலையில், Mike குடிபோதையில் தகராறு செய்தாரா என்பது தெரியவில்லை.
விருந்தின்போது, ஒரு இடத்தில் அதிகாரிகளின் மனைவிகள் அமர்ந்திருந்த நிலையில், Mike அவர்களிடம் சென்று தகாத முறையில் பேசியதாகவும், நடந்து கொண்டதாகவும், பெண்களைத் தொடமுயன்றதாகவும், அப்போது அந்த பெண்களில் சிலரது கணவர்கள் Mikeஐத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, இராணுவத்தில் பெண் இராணுவத்தினர் பலர் பாலியல் துன்புறுத்தலுக்காளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அப்படி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான இராணுவ வீராங்கனைகளில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், பாதுகாப்புத்துறைச் செயலரான Ben Wallace இராணுவ மூத்த அதிகாரிகளுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.